பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 53

பின்பு உள்ள 43-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சிவபாத இருதயரும் பகவதியாரும் கங்கை யாறு உலாவும் சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலை பின் மேற் பெற்றவராகிய ஐயராகும் பிரமபுரீசர் :வழங்கிய திருவருளினால் இந்தப் பூவுலகத்துக்குக் கிடைத்த பாக்கியம் என்று கூறுமாறு சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும் பெருமையைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி தாயனாருக்கு வேறாக உள்ள பல காப்புப் பொருள்கள் மிகை என எண்ணி அவற்றை அணிவதற்கு விரும்பாதவர் களாகி விபூதியை அந்த ஆண் குழந்தையினுடைய அழகிய துதலில் நிற்கச் செய்து அழகு நிறைந்து விளங்குமாறு புரிந்தார்கள். பாடல் வருமாறு: -

' ஆறுலவு செய்யசடை ஐயர் அரு ளாலே

பேறுலகி னுக்கென வரும்பெரிய வர்க்கு வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார் றுேதிரு நெற்றியில் கிறுத்திகிறை வித்தார்.'

ஆறு-அந்தச் சிவபாத இருதயரும் பகவதியாரும் கங்கையாறு. உலவு-உலாவும். செய்ய-சிவந்த சடை-சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற ஐயர்ஐயராகிய பிரமபுரீசர். பிரமபுரி-சீகாழி. அருளால்-வழங்கிய திருவருளால். ஏ: அசைநிலை. பேறு உலகினுக்கு-இந்தப் பூவுலகத்திற்குக் கிடைத்த பாக்கியம். என-என்று கூறுமாறு: இடைக்குறை. வரும்-சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும். பெரியவர்க்கு-பெருமையைப் .ெ ப ற் ற வ ரா கி ய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. வேறு-வேறாக உள்ள. பலகாப்பு.பல காப்புப் பொருள்கள்: ஒருமை பன்மை ம்யக்கம் அவையாவன: வேப்பிலை முதலியவை. மிகைஅதிகமானது. என்று-என எண்ணி. அவை-அந்தக் காப்புப் பொருள்களை. விரும்பார்-தங்களுடைய ஆண் குழந்தைக்கு அணிவதை விரும்பாதவர்களாகி; முற்றெச்சம்; ஒருமை