பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரிய புராண விளக்கம் 10.

பன்மை மயக்கம். நீறு-விபூதியை. திரு-அழகிய நெற்றியில்அந்த ஆண் குழந்தையினுடைய நுதலில் நிறுத்தி-நிற்கச் செய்து. நிறைவித்தார்.நிறைந்து விளங்குமாறு புரிந்: தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 44-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தச் சிவபாத இருதயர் செம்மையான பொருள் களை எடுத்து உரைக்கும் அழகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் இனிய சொற் சுவையையும் பொருட் சுவையை யும் பெற்று விளங்கும் செந்தமிழ் மொழியும் சிறப்பை அடைந்து திகழும் வண்ணம் சீகாழியில் திருவவதாரம் செய்தருளிவரும் தலைவனாகிய திருஞான சம்பந்தன் என்னும் ஆண் குழந்தையைத் தன்னுடைய அன்னையா ராகிய பகவதியாரினுடைய அழகிய மடியாகிய இடத்திலும், விளங்கும் மானிக்கங்களைப் பதித்திருக்கும் ஆசனத்திலும், பரிசுத்தமுள்ள ஒளியை வீசும் மாணிக்கங்களைப் பதித்திருக் கும் தொட்டிலிலும், உறங்கும் மலர்களைப் பரப்பி விரித் திருக்கும் படுக்கையிலும் அமரச் செய்து தாலாட்டும் நன்மைகள் பலவற்றைப் பாராட்டிப் பாடினார்கள். பாடல் வருமாறு:

தாயர் திரு மடித்தலத்தும், தயங்குமணித் தவிசினிலும், தூயசுடர்த் தொட்டிலிலும், துரங்குமலர்ச் சயனத்தும் சேயபொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரும் காயகனைத் தாலாட்டும் கலம்பலபா ராட்டினார்.'

சேய-அந்தச் சிவபாத இருதயர் செம்மையாக உள்ள: பொருள்-பொருள்களை எடுத்து உரைக்கும்; ஒருமை பன்மை மயக்கம். திரு-அழகிய மறையும்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஒருமை பன்மை மயக்கம். தீந்தமிழும்இனிய சொற்சுவை, பொருட்சுவை என்னும் இரண்டு சுவை