பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 55,

களைப் பெற்று விளங்கும் செந்தமிழ் மொழியும். சிறக்கசிறப்பை அடைந்து திகழும் வண்ணம். வரும்-சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும். நாயகனை-தலைவனாகிய திருஞான சம்பந்தனை. த், சந்தி. தாயர்-தன்னுடைய அன்னையாராகிய பகவதியாருடைய, மடிம டி யா கி 1. த்: சந்தி. தலத்தும்-இடத்திலும், தயங்கு-விளங்கும். மணிமாணிக்கங்களைப் பதித்து விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம்.த்:சந்தி. தவிசினிலும்-ஆசனத்திலும்.தாய-பரிசுத்த மாக உள்ள. சுடர்-ஒளியை வீசும் மாணிக்கங்களைப் பதித் திருக்கும்; ஆகுபெயர். த்: சந்தி. தொட்டிலிலும்-ஆட்டும் தொட்டிலிலும். தூங்கு-உறங்கும்.மலர்-மலர்களைப் பரப்பி யிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி, சயனத்தும்மெத்தையாகிய படுக்கையிலும்.தாலாட்டும்-படுக்க வைத்து தாலாட்டுப் பாடல்களைப் பாடும்; “தாலேலோ தாலேலோ' என்று பாடும். நலம்-நன்மைகள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை, பாராட்டினார்-பாராட்டிப் பெண்மணிகள் பாடினார்கள் : ஒருமை பன்மை மயக்கம்.

அவ்வாறு பாடப் பெறும் ஒரு தாலாட்டுப் பாடல் பெரியாழ்வார் திரு மொழியில் வருவது. அது வருமாறு:

' மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னாற் செய்தவண்ணச் சிறு

- - தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்; - மாணிக் குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ.”

அடுத்து உள்ள 45-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வளர்ந்து வரும் முறைமையாக உள்ள பருவங்களில் வளரும் புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய

ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள