பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奶6 பெரிய புராண விளக்கம்-10

இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களும் தலையெடுத்துச் சிறந்து நிற்குமாறு தாம் பெற்ற அழகிய தலையை மேலே எடுத்து, 'பெருமையைப் பெற்ற மழுவாயுதத்தைத் தம் முடைய திருக்கரத்தில் ஏந்தியவராகிய பிரமபுரீசருக்குப் புரியும் திருத்தொண்டுகளை அல்லாமல் வேறு திருத் தொண்டுகளைப் புரிவதற்கு யாம் இணங்க மாட்டோம்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரைப் போலத் தம் முடைய அழகிய வதனமண்டலம் அசைந்து விளங்கச் செங்கீரை ஆடியருளினார். பாடல் வருமாறு:

' வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார் அருமறைகள் தலையெடுப்ப ஆண்டதிரு முடிஎடுத்துப் பெருமழுவார் தொண்டல்லால் பிறிதிசையோம்

என்பார்போல் திருமுகமண் டலமசையச் செங்கீரை ஆடினார்.'

வரு-தாம் வளர்ந்து வரும். முறைமை-முறைமையாக உள்ள. ப்: சந்தி. பருவத்தில்-பருவங்களில்: ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பருவங்களாவன: குழந்தைப் பருவம், சிறுவராக உள்ள பருவம், காளைப் பருவம் என்பவை. வளர்-வளர்ச்சியைப் பெற்று வரும். புகலி-புகலியாகிய சீகாழியில். ப்: சந்தி. பிள்ளையார்-ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அரு-பொருள் தேரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள மறைகள்இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வதம் என்னும் நான்கு வேதங்களும். தலையெடுப்ப-தலை யெடுத்துச் சிறந்து நிற்குமாறு. ஆண்ட-தாம் பெற்றுள்ள. திரு-அழகிய முடி-தலையை. எடுத்து-மேலே எடுத்து. ப்:சந்தி.பெரு-பெருமையைப் பெற்ற மழுவார்-மழு என்னும் ஆயுதத்தைத் தம்முடைய திருக்கரத்தில் ஏந்தியவராகிய பிரமபுரீசருக்கு. பிரமபுரி-சீகாழி. தொண்டு-புரியும் திருத் தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். அல்லால்-அல்