பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.* திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 57

லாமல். பிறிது-வேறு திருத்தொண்டுகளை. இசையோம்:புரிவதற்கு யாம் இணங்க மாட்டோம். என்பார் போல்என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரைப் போல். திருஅழகிய முகமண்டலம்-வட்டமாகிய தம்முடைய வதனம். அசைய-அசைந்து விளங்குமாறு. ச்: சந்தி. செங்கீரை ஆடினார்-செங்கீரை ஆடியருளினார். செங்கீரை-முதல் முதலாகக் குழந்தை பேசும் குதலைச் சொற்கள். ஒரு செங் கீரைப் பருவப் பாடல் பெரியாழ்வார் பாடியருளியது. அது வருமாறு:

' உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா

ஊழிதோறுாழிபல ஆவின் இலை யதன்மேல் பையஉ யோகுதுயில் கொண்டபரம் பரனே

பங்கய நீணயனத் தஞ்சனமே னியனே செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதிச்

செவ்வு பொலிமகரக் காதுதிகழ்ந் திலக ஐய, எனக்கொடுகால் ஆடுக செங்கீரை!

ஆயர்கள் போரேறே, ஆடுக, ஆடுகவே!"

பின்பு உள்ள 46-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 'இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்களே, யாம் சைவ சமயத்தை அல்லாமல் வேறு சமயங் களை அறியமட்டோம்; எம்முடைய எதிரில் நாடி வாராமல் அகன்று செல்வீர்களாக' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு தம்முடைய அழகிய கைகளைத் தட்டுவதை பும் தூயவனாகிய பிரமபுரீசனிடம் விருப்பம் மருவிய கஞ்ச தாளங்களைப் பெறுவதற்காகத் தட்டுவதையும் காட்டுபவற் றைப் போலத் தம்முடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருக்கரங்களினால் சப்பானி கொட்டியருளி னார். பாடல் வருமாறு:

' "காம் அறியோம், பரசமயம் உலகிர்1எதிர் காடாது போமகல' என்றங்கை தட்டுவதும் புனிதன்யால்