பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - பெரிய புராண விளக்கம்

காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல் தாமரைச்செங் கைகளினால் சப்பாணிகொட்டினான்.'

நாம்-அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் யாம். உலகிர்-இந்த மண்ணுலகத்தின் வாழும் மக்களே. பரசமயம்-சைவசமயம் அல்லாத வேறு சமயங்களை ஒருமை பன்மை மயக்கம். அறியோம்-அறிய மாட்டோம். எதிர்-எம்முடைய எதிரில், நாடாது-நாடி, வாராமல் போம் அகல-அகன்று போவீர்களாக, அகல, எச்சத்திரிபு. என்று-எனது திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அம்கை-தம்முடைய அழகிய கைகளை ஒருமை பன்மை மயக்கம். தட்டுவதும்-கொட்டுவதையும். புனிதன் பால்-துரயவனாகிய பிரமபுரீசனிடத்தில். காமரு-விருப்பம் மருவிய. தாளம்-கஞ்ச தாளங்களை ஒருமை பன்மை மயக் கம். பெறுதற்கு-தாம் பெறுவதற்காக ஒத்துவதும்-தட்டு வதையும். காட்டுவ போல்-காட்டுபவற்றைப் போல். தாமரை-செந்தமாரை மலர்களைப் போல்: ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செம்பசிவந்து விளங்கும். கைகளினால்க திருக்கரங்களால், சப்பாணி கொட்டினார்-சப்பாணியைக் கொட்டியருளினார். சப்பாணி கொட்டுதல்-ஒரு கையோடு மற்றொரு கையைத் தட்டுதல். பாணி-கை. பெரியாழ்வார் திருமொழியில் வரும் ஒரு சப்பாணிப் பருவப் பாசுரம் வருமாறு: - -

"மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்

ஆணிப்பொன் னாற்செய்த ஆய்பொன் னுடைமணி பேணிப் பவளவாய் முத்திலங்கப் பண்டு காணி கொண்ட கைகளால் சப்பானி!

கருங்குழற் குட்டனே சப்பாணி' பின்பு வரும் 47-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வேதங்கள் விதித்த விதிகளிலிருந்து பிழைபடும் சைவ சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய படுகுழியில் விழுந்து