பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 53 o'

தாங்கள் செல்லும் நல்ல கதி தவறப் பெரிய ஆகாயத்தில் நிரம்பியுள்ள நறுமணத்தை நிரப்பப் பெற்ற கங்கையாறு ஒடும் கதியைப் பொருந்தி விளங்கும் சடாபாரத்தைத் தம் முடைய தலையின்மேற் பெற்றவராகிய தோணியப்பர் சிவஞானத்தை வழங்கியருள அதைப் பெறுவதற்கு உரிமை யைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்: சந்திரன் தவழும் உச்சியைப் பெற்ற தம்முடைய திருமாளி கைக்கு முன்னே இருக்கும் முற்றத்தினுடைய பக்கத்தில் தவழ்ந்தருளினார். பாடல் வருமாறு:

" விதிதவறு படும்வேற்றுச் சமயங்களி டைவிழுந்து கதிதவழ இருவிசும்பு கிறைந்தகடி வார் கங்கை

கதிதவழும் சடைமுடியார் ஞானம் அளித் திடஉரியார் மதிதவழ்மா ளிகைமுன்றில் மருங்குதவழ்ந்

- - தருளினார்." விதி-வேதங்கள் விதித்த விதிகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். தவறுபடும்-பிழைபடும். வேற்றுச் சமயங் களிடை-சைவ சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய படுகுழியில். விழுந்து கதி-விழுந்து தாங்கள் செல்லும் நல்ல கதி. தவழ-தவற. இரு-பெரிய, "கருமையாகிய' எனலும் ஆம். விசும்பு-ஆகாயத்தில், நிறைந்த-நிரம்பியுள்ள கடிநறுமணத்தை. வார்-நிரம்பப் பெற்ற, கங்கை-கங்கையாறு. கதி-ஒடும் கதியை. தவழும்-பொருந்தி விளங்கும். சடை முடியார்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய தோணியப்பர். தோனியப்பர்-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் ஒரு கட்டு மலையின் மேல் உள்ள தோணியில் வீற்றிருக்கும் சிவபெரு மானார். ஞானம்-சிவஞானத்தை. அளித்திட-வழங்கி யருள. உரியார்-அதைப் பெறுவதற்கு உரிமையைப் பெற்ற வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மதிசந்திரன். தவழ்-தவழும் உச்சியைப் பெற்ற, மாளிகை-தம் முடைய திருமாளிகைக்கு முன்னால் இருக்கும். முன்றில்முற்றத்தினுடைய. மு ன் றி ல்-இல்முன்; முன் பின்னாகத்.