பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

off0 பெரிய புராண விளக்கம்-10

தொக்க தொகை. மருங்கு-பக்கத்தில். தவழ்ந்தருளினார்அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாராகிய ஆண் குழந்தையார் தவழ்ந்தருளினார்.

பின்பு உள்ள 48-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: "தம்மைச் சுற்றி வரும் பெருமையைப் பெற்று விளங்கும் தம்முடைய உறவினர்களாகிய மயில்களைப் போன்ற பெண்மணிகளும், வேலைக்காரிகளும், சீகாழியில் வாழும் மக்களுடைய சீராட்டைப் பெற்றவரே, கவுண்டின்ய கோத் திரத்தில் பிறந்த அந்தணர்களினுடைய கற்பகத்தைப் போன்றவரே" என ச, ரி, க, ம, பத, நி, ச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற சங்கீதமும், பல வகையான அறுபத்து நான்கு கலைகளும், எல்லா உலகங்களிலும் வாழ்பவர்களும் தனித்தனியாக வாழுமாறு சீகாழியில் திருவவதாரம் செய் தருளி வரும் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் என்னும் ஆண் குழந்தையாரை, வருக! வருக!' என்று

அழைக்க. பாடல் வருமாறு:

சூழவரும் பெருஞ்சுற்றத் தோகையரும் தாதியரும் 'காழியர்தம் சீராட்டே, கவுணியர்தம் கற்பகமே என் றேழிசையும் பலகலையும் எவ்வுலகும் தனித்தனியே வாழவரும் அவர்தம்மை வருக.வருக என அழைப்ப."

- இந்தப் பாடல் குளகம். சூழவரும்-தம்மைச் சுற்றி வரும். பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். சுற்றதம்முடைய உறவினர்களாகிய, திணை மயக்கம். த், சந்தி. தோகையரும்-மயில்களைப் போன்ற பெண்மணிகளும்: உவம ஆகுபெயர். தாதியரும்-வேலைக்காரிகளும். காழியர் தம்-சீகாழியில் வாழும் மக்களுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. சீராட்டே-சீராட்டைப் பெற்ற வரே. கவுணியர்தம்-கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த அந்தணர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. கற்பகமே-கற்பக மரத்தைப் போன்றவரே: உவம ஆகு பெயர். என்று-என. ஏழிசையும்-ச, ரி, க, ம, பத,