பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந் த மூர்த்தி நாயனார் புராணம் 6 o'

தி, ச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற சங்கீதமும். பல கலையும்.பல வகையான அறுபத்து நான்கு கலைகளும்: ஒருமை பன்மை மயக்கம். அவை இன்ன என்பதை வேறு. ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. எவ்வுலகும்எல்லா உலகங்களிலும் வாழ்பவர்களும்; இட ஆகு பெயர். உலகும்: ஒருமை பன்மை மயக்கம், தனித்தனி-தனித்தனி பாக. ஏ: அசைநிலை. வாழ-நல்ல வாழ்வைப் பெறுமாறு , வரும்-சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும். அவர் தம்மை-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். என்னும் ஆண் குழந்தையாரை. தம்: அ ைச நி ைல. வருக, வருக என-வருக வருக எ ன் று. என: இடைக்குறை. அழைப்ப அழைக்க வருக வருக என்று. ஆண் குழந்தையை அழைக்கும் பருவத்தை, வருகைப் பருவம், வாரானைப் பருவம் என்று புலவர்கள் கூறு, வார்கள். மார்க்கசகாயதேவர் பாடியருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் 6-ஆவதாக உள்ள வருகைப் பருவத்தில் வரும் முதற் பாடல் வருமாறு:

. செந்தா மரையிற் சிறுசதங்கை சிலம்பக்

r குதம்பைக்குழை மின்னச்

செம்பொன் அரைஞாண் நெகிழ்ந்தொளிரச்

  • சிகரக் குடுமி இசைந்தசைய வந்தா தரவின் மணிவாயார் மழலை காட்டி

மரகதத்தாம். மடிமீ தேறி முலையுண்டு வளர்ந்து விரிஞ்சைப்

பதிவாழும் கந்தா வருக, மனம்கமழும் கடம்பா வருக, அசுரேசர்

காலா வருக, பன்னிரண்டு கையா வருக,

வழித்துணைவர்" மைந்தா வருக, மயிலேறும் மன்னா வருக,

அடியார்கள் வாழ்வே வருக, தெய்வசிகா மணியே வருக,

வருகவே."