பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 62 பெரிய புராண விளக்கம்-10

பின்பு வரும் 49-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'பெருமையைப் பெற்று விளங்கும் புகலியாகிய சீகாழி ஆயில் திருவவதாரம் செய்தருளிய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய அழகிய சிரிப்டால் தம்மை அழைத்தவர்களாகிய பெண்மணிகளி னுடைய செழிப்பைப் பெற்ற வதனங்களை மலர்ச்சியைப் பெறுமாறு செய்தருளியும், தம்முடைய திருவுள்ளத்தில் உண்டாகும் மகிழ்ச்சி தலை சிறந்து நிற்க, அந்தப் பெண் மணிகளின்மேல் போகுமாது நடை வண்டியைத் தள்ளி விட்டும், தம்முடைய திருவுள்ளம் பக்தியினால் உருக்கத்தை அடைந்து கரைவைப் பெற்று அலைந்து விளங்க அந்தப் பெண்மணிகளோடு அவர்களை அணைத்துக் கொண்டு தம்முடைய கைகளால் தழுவிக் கொண்டும், முன்னால் பெருகி எழுந்த ஆனந்தத்தை அந்தப் பெண்மணிகள் அடையுமாறு வழங்கியருளினார். பாடல் வருமாறு:

திருநகையால் அழைத்தவர்தம் செழுமுகங்கள்

- மலர்வித்தும் வருமகிழ்வு தலைசிறப்பு மற்றவர்மேற் செலவுகைத்தும் உருகி.மனம் கரைந்தலைய உடனணைந்து

தழுவியும் முன் பெருகிய இன் புறஅளித்தார் பெரும்புகலிப்

15łóirsWo6Irium ir.

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். புகலிப் பிள்ளையார்-புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய் தருளிய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திரு-தம்முடைய அழகிய நகையால்சிரிப்பினால். அழைத்தவர்தம்-தம்மை வருக, வருக என்று அழைத்தவர்களாகிய பெண்மணிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. செழு-செழிப்பைப் பெற்ற, முகங்கள்-வதனங்களை. மலர்வித்தும்-மலர்ச்சியை