பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரிய புராண விளக்கம்-1

வளர்-அந்த ஆண் குழந்தையாராகிய திருஞாண். சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் வளர்ந்து வரும். பருவகுழந்தைப் பருவத்தினுடைய முறை-முறைப்படி.. ஆண்டு ஒரு பிராயம். வருவதன்முன்-நிறைவதற்கு முன்னால், மலர்மலர்களை ஒருமை பன்மை மயக்கம். வரி-கோடுகளைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். உளர்-கிளறும்; கிண்டும். கருகரிய, மென்-மென்மையான. சுருள்-சுருள்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். குஞ்சியுடன்-தம்முடைய தலை மயிரோடு. அலைய. அந்த வண்டுகள் அலையுமாறு. ச்: சந்தி. செந்நின்று-நேராக நின்று கொண்டு. கிளர்-கிளர்ந்து எழும். ஒலி-கிண்கிணி என்னும் ஒலியை எழுப்பும். எழுப்ப-கிண் கினிகள் இனிய நாதத்தை எழுப்புமாறு செய்ய. க்: சந்தி கீழ்மைநெறி-இழிவான தன்மையைப் பெற்ற வழிகளாகிய. நெறி: ஒருமை பன்மை மயக்கம், ச்: சந்தி. சமயங்கள்-சைவ: சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய சமண சமயமும் பெளத்த சமயமும், தளர்நடை இட்டு தளர்ந்து போய் நடத்தலை மேற்கொண்டு. அற-ஒழிந்து போகுமாறு:த்:சந்தி. "தாமும் என்றது 'அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் என்பதை. தளர்நடையிட்டரு. வினார். தளர் நடை நடந்தருளினார்.

பெரியாழ்வார் திருமொழியில் வரும் தளர்றடைம் பருவத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:

" தொடர்சங்கிலி சலார்பிலார் என்னத்

துரங்கு பொன்மணி ஒலிப்பப்

படுமும் மதப்புனல் சோரவாரணம் பைய நின்றுார் வதுபோல்

உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறைக றங்கத்

தடந்தான் இணைகொண்டு சார்ங்கபாணி

தளர்நடை நடவானோ...'