பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 65

பிறகு வரும் 51- ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

'அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வேலைக்காரிகளினுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு தளர்ந்த நடையினுடைய தளர்ச்சியை அகன்று ஒளியை வீசும் தாம் அணிந்து கொண்டிருந்த சிறிய மணிகளைக் கட்டியிருக்கும் சலங்கைகளைக் கட்டிய வலம் பக்கத்தில் சுற்றியுள்ள தம்முடைய திருவடிகளாகிய செந்தா மரை மலர்கள் தரையில் படியுமாறு தாம் வளர்ந்து வரும் குழந்தைப் பருவத்தின் முறைப்படி ஒரு பிராயத்திற்கு மேல் அடையத் தம்முடைய திருவடிகளால் நடைவண்டியின் உதவி இல்லாமல் நடந்தருளி விளையாட்டைப் புரிவதற்கு

ஆரம்பித்தார். பாடல் வருமாறு:

தாதியர்தம் கைப்பற்றித் தளர்நடையின்

அசைவொழிந்து சோதியணி மணிச்சதங்கை தொடுத்தவடம்

புடைசூழ்ந்த பாதமலர் கிலம்பொருந்தப் பருவமுறை

- ஆண்டொன்றின் மீதணைய கடந்தருளி விளையாடத் தொடங்கினார்.

தாதியர் தம்-அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமாளிகையில் குற்றேவல்களைச் செய்யும் வேலைக்காரிகளினுடைய. தம்: அசைநிலை. கை-கைகளை ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பற்றி-பிடித்துக் கொண்டு. த்: சந்தி. தளர்நடை யின்-தாம் முன்பு நடந்த தளர்ந்த நடையினுடைய. அசைவுதளர்ச்சியிலிருந்து. ஒழிந்து-நீங்கி. சோதி-ஒளியை வீசும். அணி-தாம் அணிந்து கொண்டிருந்த மணி-சிறிய மணி களைக் கட்டியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சதங்கை-சலங்கைகளை: ஒருமை பன்மை மயக்கம். தொடுத்த-கட்டிய. வடம்-மாலை; சலங்கைகளின் மாலை. புடை-பக்கத்தில். சூழ்ந்த-சுற்றியுள்ள பாதம்-தம்முடைய

டெ-10-5