பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - - பெரிய புராண விளக்கம்-10

திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலர்-செந்தா மரை மலர்கள்; ஒருமை .ன்மை மயக்கம். நிலம்-தரையில். பொருந்த-படியுமாறு. ப்: சந்தி. பருவமுறை-குழந்தைப் பருவத்தின் முறைப்படி. ஆண்டு ஒன்றின் மீது-ஒரு பிராயத் திற்கு மேல். அணைய-வந்து சேர நடந்தருளி-தம்முடைய திருவடிகளால் நடை வண்டியின் உதவியில்லாமல் நடந் தருளி. விளையாட-விளையாட்டைப் புரிவதற்கு. த்: சந்தி. தொடங்கினார்-அந்த நாயனார் ஆரம்பித்தார்.

அடுத்து உள்ள 52-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிறிய மணிகளைக் கட்டிய நடை வண் டியைத் தொடர்ச்சியாக நடந்து உருண்டு ஓடச் செய்து செழுமையைப் பெற்ற மணற்பரப்பில் சிற்றில்களைக் கட்டி விளையாடும் நறுமணம் கமழும் நெற்றிகளைப் பெற்ற பேதைப் பருவப் பெண்களின் பக்கத்தில் நடந்து ஒடிச் சென்று அவர்கள் கட்டியிருக்கும் சிற்றில்களைத் தம்முடைய கால்களால் உதைத்துத் தள்ளி அழித்தும், சிறியவையாக உள்ள வேர்வைத் துளிகள் தம்முடைய திருமேனியின் மேல் முகிழ்க்கக் கொழுமையைப் பெற்ற புழுதியில் அளைந்த தம் முடைய திருமேனியின் கோலம் வீதியில் பெரிய பிரகாசத் தைப் பரவுமாறு செய்ய நடந்து வந்து வளர்ச்சியை அடைந் தருளினார். பாடல் வருமாறு:

சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச் செழுமணற்சிற் றில்கள் இழை கறுநுதற்பே தையர்மருங்கு

கடந்தோடி அடர்ந்தழித்தும் குறுவியர்ப்புத் துளிஅரும்பக்

கொழும்பொடியா டியகோலம் மறுகிடைப்பே ரொளிபரப்பு

வந்துவளர்க் தருளினார்.' சிறு-அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிறிய. மணி-மணிகளைக் கட்டிய;