பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெரிய புராண விளக்கம்-1:::

நீதி-நியாயமான முறை-முறையில் அமைந்தச்:சந்தி.சடங்கு மங்கலச் சடங்குகளை ஒருமை பன்மை மயக்கம். நெறி. நெறிப்படி. முடிப்பதற்கு-செய்து நிறைவேற்றுவதற்காக நீராட-பிரமதீர்த்தத்தில் முழுகும் பொருட்டு, த், சந்தி, தாதையார்-தம்முடைய தந்தையாராகிய சிவபாத இரு து யர்.போம்-செல்லும். பொழுது-சமயத்தில், தம்-தம்முடைய பெருமான்-தலைவனாகிய பிரமபுரீசன். அருள்-வழங்கிய திருவருள். கூட-சேரவே. ச்: சந்தி. சோதி-ஒளி வெள்ளத்தை வீசும். மணி-அழகிய, மனை-தம்முடைய திருமாளிகைக்கு முன்னால் இருக்கும். முன்றில்-முற்றத்தில். தொடர்ந்து தம்முடைய தந்தையாரைத் தொடர்ந்து சென்று. அழுது அழுது கொண்டே. பின் தம்முடைய தந்தையாருக்கும் பின்னால், சென்றார்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிப் போனார்.

பிறகு வரும் 57-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு தம்முடைய தந்தையாராகிய சிவபாதி, இருதயருக்குப் பின்னால் எழுந்தருளிய ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பார்த் துப் பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தைப் புரிந்த வராகிய அந்தச் சிவபாத இருதயர் முன்னால் போவதை விட்டு விட்டு சினம் மூள்பவரைப் போல அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்மோடு வாராதவாறு தடுத்தவுடன் மின்னலைப் போல ஒளியைச் செய்கின்ற தங்கத்தால் ஆகிய கிண்கிணிகளை அணிந்து கொண்டிருக் கும் தம்முடைய திருவடிகளைத் தரையில் தட்டிக் கொண்டு அந்த ஆண் குழந்தையார் திரும்பி எழுந்தருளிச் செல்லா மையால், 'உன்னுடைய செயல் இதுவானால் என்னோடு வருவாயாக!' என்று அந்தச் சிவபாத இருதயர் கூறிவிட்டு அந்த இடத்தில் தம்முடைய ஆண் குழந்தையாராகிய அந்த நாயனாரை அழைத்துக் கொண்டு அவரோடு பிரமதீர்த்தத் 'திற்கு நீராடும் பொருட்டுச் சென்றார். பாடல் வருமாறு