பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 77 -

நீர் வெள்ளங்கள்:ஒருமை பன்மை மயக்கம்.பல.பலவற்றை, விரிக்கும்-விரிவாக உண்டாக்கும். கருப்பம் போல்-கருப்பத் தைப் போல், இடையறா-இடைவிடாத, ப், சந்தி. பெரும். பெருமையைப் பெற்று விளங்கும். தீர்த்தம்-தீர்த்தங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எவற்றினுக்கும்-யாவற்றிற்கும். பிறப்பிடமாய்-பிறப்பதற்கு உரிய இடமாகி. விடை-இடப மாகிய உயர்த்தார்-துவசத்தை உயர்த்திப் பிடித்தவராகிய தோனியப்பர். திருத்தோனி.வீற்றிருக்கும் அழகிய தோணி யாகிய, இந்தத் தோணி சீகாழியில் பிரமபுரீசருடைய திருக் கோயிலில் உள்ள ஒரு கட்டுமலையின் மேல் இருப்பது. ப்: சந்தி. பற்று-பற்றுக் கோட்டை விடா-விட்டு விடாத, மேன்மையதாம்-மேம்பாட்டைப் பெற்றதாக விளங்கும். தடம்-தடாகமாகிய, அதனில்-அந்தப் பிரம தீர்த்தத்தினு டைய, உருபு மயக்கம். துறை-துறையை. அடைந்தார். அந்தச் சிவபாத இருதயர் அடைந்தார்.

பிறகு வரும் 59-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'இந்தப் பூவுலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத் தவராகிய சிவபாத இருதயர் தம்முடைய ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பிரம தீர்த்தத்தினுடைய கரையில் அமருமாறு செய்து விட்டுத் தாம் தம்முடைய ஆண் குழந்தையாரைப் பிரிவதற்கு அச் சத்தை அடைந்து தெளிவாக உள்ள அந்தப் பிரம தீர்த்தத் தில் நிரம்பியுள்ள புனலில் இறங்க முடியாதவராகித் தம் முடைய தர்மபத்தினியாராகிய பெரிய நாயகியாரோடும் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையில் விளங்கும் அழகிய தோணியில் வீற்றிருந்த, வள்ளலாராகிய தோணியப்பரை அவருடைய சந்நிதியில் அவரைப் பணிந்துவிட்டுப் பனிவகைப் போன்ற நீர் நிரம்பிய வாவியாகிய பிரமதீர்த்தத்துக்கு உள்ளே இறங்கி நீரில் புகுந்தார். பாடல் வருமாறு: