பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍忍 பெரிய புராண விளக்கம்-10

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது. புண்ணிய-புண்ணியச் செயல்களைப் புரிந்திருக் கும்; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கன்று-கன்றுக் குட்டியை. அனையவர் தாம்-போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசைநிலை. கண் -தம் முடைய விழிகளாகிய ஒருமை பன்மை மயக்கம். மலர்கள்செந்தாமரை மலர்களில். நீர்-நீர்த்துளிகள்: ஒருமை பன்மை மயக்கம். நீர்த்துளிகள்-கண்ணிர் த்துளிகள். ததும்ப-துளும்பி வழிய. க், சந்தி. கை-தம்முடைய திருக்கரங்களாகிய:ஒருமை பன்மை மயக்கம், ம்: சந்தி. மலர்களால்-செந்தாமரை மலர் களினால். பிசைந்து-தம்முடைய கண்களைப் பிசைந்து கொண்டு. வண்ண-சிவப்பான நிறத்தைப் பெற்ற மலர்மாதுளம் பூவைப் போலவும்: உவம ஆகுபெயர். ச் சந்தி. இ.ஒவப்ாக விளங்கும், கனி-கோவைப் பழங்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம்; உவம ஆகு பெயர். வாய்-தம்முடைய திருவாயில் உள்ள.மணி-மாணிக்கங்களைப் ஒ.ப. இவந்த நிறத்தைப் பெற்ற, அதரம் உதடுகளில்: ஒருமை பன்மை மயக்கம். புடை-பக்கத்தில் துடிப்ப-துடித் துக் கொண்டிருக்க. எண்-கணக்கு. இல்-இல்லாத கடைக் குறை. மறை-வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக் கம். இக்காலத்தில் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களே இருந்தாலும் முன் காலத்தில் கணக்கு இல்லாத வேதங்கள் இருந்தன: 'அனந்தா வை வேதா" என்று வருவதைக் காண்க. ஒலி-இனிய கானம், பெருக-பெருகி எழ. எவ்வு யிரும்-எந்த வகையாக உள்ள உயிர்களும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த உயிர்களாவன: மக்கள், பலவகையான மிருகங்கள், பலவகையாகிய பறவைகள், ஊர்வன, புழு,பூச்சி, திர் வாழ் பிராணிகள் முதலியவை.குதுகலிப்ப-குதூகலத்தை .ட ஆனந்தத்தைப் பெறப்: சந்தி.பொருமி விக்கி விக்கி. அழுதருளினார்.அப்போது அழுதருளினார்.

அடுத்து உள்ள 63-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: