பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 8Ꭵ

நிலைமை-நிலையின் பான்மை. தலைக்கீடா-ஒரு வியாஜ மாக. ஈசர்-பரமேசுவரராகிய பிரமபுரீசருடைய கழல்வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடி களை ஆகுபெயர். முறை-முறையாகி. புரிந்த-விரும்பிய. முன்-முன்பு இருந்த உணர்வு-உணர்ச்சி. மூள-மூண்டு எழ, நிறை-திறைந்த, புனல்-நீரைப் பெற்ற, வாவி-வாவியாகிய பிரமதீர்த்தத்தினுடைய. வாவி: 'வாபீ என்னும் வட சொல்வின் திரிபு. க், சந்தி. கரையில் நின்றருளும்-கரையில் நின்று கொண்டிருந்தருளும். பிள்ளையார்-ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அழத் தொடங்கினார்-அழுதருள ஆரம்பித்தார்.

பிறகு வரும் 82-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'புண் ணியச் செயல்களைப் புரிந்த கன்றுக்குட்டியைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் முடைய விழிகளாகிய செந்தாமரை மலர்களில் நீர் தளும்பி வழியத் தம்முடைய திருக்கரங்களாகிய செந்தாமரை மலர் களினால் தம்முடைய கண்களைப் பிசைந்து கொண்டு சிவப்பான நிறத்தைப் பெற்ற மலரைக் கொண்ட சிவப்பாக விளங்கும் கோவைப் பழங்களைப் போன்ற அதரங்களைப் பெற்ற தம்முடைய திருவாயில் உள்ள மாணிக்கங்களைப் போலச் சிவந்த நிறத்தைப் பெற்ற உதடுகள் பக்கத்தில் துடிக்க கணக்கு இல்லாத வேதங்களினுடைய இனிய கானம் பெருகி எழ எந்த வகையாக உள்ள உயிர்களும் குதுகலத்தை அடையுமாறு பொருமிக் கொண்டு அழுதருளினார். பாடல் வருமாறு: -

கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்க ளாற்பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணி அதரம்

புடைதுடிப்பு எண்ணில்மறை ஒலிபெருக எவ்வுயிரும் குதுகலிப்பம் புண்ணியக்கன் றனையவர் தாம் பொருமிஅழு

தருளினார்.'" பெ-10.6