பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 9 :

தருளுகின்ற, பிள்ளையார் தமை-ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தமை:இடைக்குறை. தம்: அசை நிலை. நோக்கி-பார்த்து. அருள்-திருவருளும். கருணை-கருணையும். எழுகின்ற-எழுத்து தோன்றுகின்ற. திருவுள்ளத்து-திருவுள்ளத்தைப் பெற்ற, இறையவர் தாம். இறையவராகிய தோனியப்பர். தாம்: அசைநிலை. இறை யவர்-எங்கும் நிறைந்திருப்பவர். எவ்வுலகும்-எந்த வகை யான் உலகங்களில் வாழ்பவர்களும்; இட ஆகுபெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். தொழுகின்ற-வணங்கு. கின்ற மலை.இமயமலை அரசனுடைய புதல்வியும்; திணை மயக்கம்: ஆகுபெயர். க்: சந்தி. கொடியை-பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய பெரிய நாயகியை உவம ஆகுபெயர். ப்: சந்தி. பார்த்தருளி-நோக்கியருளி. த்: சந்தி, துணை முலைகள்-உன்னுடைய இரண்டு கொங்கைகளும், பொழி கின்ற-சொரிகின்ற, பால்-பாலாகிய, அடிசில்-இனிய சுவை யைப் பெற்ற உணவை. பொன் வள்ளத்து-ஒரு பொற் கிண்ணத்தில் வைத்து. ஊட்டு-இவனுக்கு உண்ணுமாறு வழங்குவாயாக. என்ன-என்று அந்தத் தோனியப்பர் திரு வாய் மலர்ந்தருளிச் செய்ய.

அடுத்து வரும் 67-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும், ஏழு உலகங் களில் வாழும் உயிர்களையும், பெற்றருளி அந்த எல்லாவற். நிற்கும் காரண பூதையாகி வளப்பம் பெருகி எழும் கருணையே தன்னுடைய அழகிய திருவுருவமாக உள்ள சீர்த்தியைப் பெற்ற தெய்வப் பெண்ணாகிய பெரிய நாயகி சிவபெருமானாராகிய தோணியப்பர் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்தவுடன் அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் எழுந்தருளிம் போய் அவரை அடைந்து கச்சோடு பொருந்திய தம்முடைய அழகிய கொங்கைகளிலிருந்து பாலை ஒரு பொற்கிண்ணத் தில் கறந்தருளி. பாடல் வருமாறு: