பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:等别 பெரிய புராண விளக்கம்-10

ஆரணமும் உலகேழும் ஈன்றருளி அனைத்தினுக்கும் காரணமாய் வளம்பெருகு கருணைதிரு வடிவான சீரணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்றணைந்து வாரினங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி.' இந்தப் பாடலும் குளகம். ஆரணமும்-இருக்கு வேதம், யஜ ர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். உலகு ஏழும்-ஏழு உலகங்களில் வாழும் உயிர்களையும் இடஆகு பெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். ஈன்றருளிபெற்றருளி. அனைத்தினுக்கும்-அவை எல்லாவற்றிற்கும். காரணமாய்-காரண பூதையாகி. வளம்-வளப்பம், பெருகுபெருகி எழும். கருணை-கருணையே. திருவடிவு ஆன-தன்னு டைய அழகிய திருவுருவமாக உள்ள சீர்-சீர்த்தியைப் பெற்ற அணங்கு-தெய்வப் பெண்ணாகிய பெரிய நாயகி. சிவபெருமான்-சிவபெருமானாகிய தோணியப்பன். அருளுத லும்-அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்தவுடன். செனறு. அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் எழுந்தருளிப் போய். அணைந்துஅந்த நாயனாரை அடைந்து. வார்-கச்சு. இணங்கு-பொருந் திய திரு.அழகிய முலை-தம்முடைய கொங்கைகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பால்-இனிய சுவையைப் பெற்ற பாலை. வள்ளத்து-ஒரு பொற்கிண்ணத்தில். க. சந்தி. கறந்தருளி-வைத்துக் கறந்தருளி.

பின்பு வரும் 68-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "அந்தப் பெரிய நாயகியார் நினைப்பதற்கு அருமையாக உள்ள சிவஞானமாகிய இனிய சுவையைப் பெற்ற அமுதத் தைப் போன்ற பாலைத் தம்முடைய கொங்கைகளிலிருந்து ஒரு பொற்கிண்ணத்தில் கறந்து அந்தப் பாலோடு சிவ ஞானத்தைக் குழைத்தருளி, இந்தப் பாலாகிய இனிய சுவையைப் பெற்ற உணவை நீ உண்ணுவாயாக!' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து உண்ணுமாறு செய்தருளி ..உமையாகிய பெரிய நாயகி தம்மை எதிரில் பார்க்கும் அந்த