உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 893

அன்றைக்கு. அங்கு-அந்தத் திருவாரூரில், அவர்-அந்தப் பரவை சுந்தர மூர்த்தி நாயனார் என்னும் இருவருடைய, ஒருமை பன்மை மயக்கம். மன்றலை-திருமணத்தை நீர்நீங்கள். செயும்-புரிவீர்களாக இடைக்குறை. என்று-என. அடியார்-தம்முடைய அ டி ய வ ர் க. ஸ் ஒருமை பன்மை மயக்கம். அறியும்-தெரிந்து கொள்ளும். படியால்-விதத் தால், அருளி-திருவாய் மலர்ந்தருளிச் செய்து.

சுருள் ஒதி: சுேரிகுழல் நல்ல துடி இடையோடு." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், சுரிபுரி குழலி யோடும்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'சுருள்புரி கூழையர்.', 'சுரிகுழற் பனைமுலை மடந்தை.', 'சுரிகுழல் மடந்தை.' என்று மாணிக்க வாசகரும், 'நெறிந்த கருங் குழல்மடவாய்.” என்று பெரியாழ்வாரும், சுரிகுழல் கனி வாய்த் திரு.”, நெறித்திட்ட மென்கூழை நேரிழை.' என்று திருமங்கை ஆழ்வாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 179-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நிலை பெற்ற புகழைக் கொண்ட திருநாவலூரில் வாழும் மக்களை ஆட்சி புரியும் அரசராகிய சுந்தர மூர்த்தி நாயனார் மகிழ்ச்சியை அடையும் வண்ணம் மங்கையாகிய பரவையை வழங்கினோம்; இத்தகைய விதத்தில் நம்முடைய அடியவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமே யாம் கூறினோம்' எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுத் தங்கத்தைப் போன்ற புரிகளைக் கொண்ட சிவந்த சடா பாரத்தைத் தன்னுடைய தலையில் பெற்றவனும், இடப |- ஒட்டுபவனும், போர் புரியும் பெரிய யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்துக் கொண்டவ .ணும் ஆகிய வன்மீக நாதன், அன்னப் பறவையைப் போன்ற நடையை உடையவளாகிய பரவைக்கு, 'நம்பியாரூரனாகிய சுந்தர மூர்த்தியோடு உனக்குத் திருமணம் சமீபகாலத்தில் நடைபெறும்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய." பாடல் வருமாறு: . . . X- -