உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 45

இச்ைப்ப-கூற. ச்சந்தி சென்றார்-சுந்தரமூர்த்தி நாயனார் யோகப் புரவியின்மேல் ஏறிக்கொண்டு எழுந்தருளினார். - -

அடுத்து வரும் 27-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இவ்வாறு எழுந்தருளும் திருமணக் கோலத்தோடு அடியேங்களுடைய வள்ள்லாராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தெளிவாக விளங்கும் நறுமணம் உள்ள பன்னீர், பொற் சுண்ணம் முதலிய வாசனைத் திரவியங்களைத் தெளித்திருக் கும் திருமணப் பந்தலுக்கு முன்னால் எழுந்தருளி வெண்மை யான சங்க வாத்தியங்கள் எல்லா இடங்களிலும் பெரிய மேகக் கூட்டத்தைப் போல முழக்கத்தைச் செய்யத் தாம் ஏறிக்கொண்டு எழுந்தருளிய யோகப்புரவியின்மேலிருந்து இறங்கி, விரும்புவதற்கு உரியதாக இருக்கும் அந்த ஒப்பற்ற திருமணத்தினுடைய வகையில் அந்தத் திருமணப் பந்தவில் நடந்ததை அடியேன் பாடுவேன்; அதனால் உஜ்ஜீவனத்தை அடைந்தவன் ஆவேன். பாடல் வருமாறு: - -

'வருமணக் கோலத் தெங்கள்

வள்ளலார் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு

சென்றுவெண் சங்கம் எங்கும் பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப்

ப்ரிமிசை இழிந்து பேணும் ஒருமணத் திறத்தின் அங்கு - -

நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்,' இது சேக்கிழார் கூற்று. வரும்-இவ்வாறு எழுந்தருளும். மணக்கோலத்து-திருமணக் கோலத்தைக் கொண்ட.எங்கள் -அடியேங்களுடைய. வள்ளலார்-வள்ளலாராகிய சுந்தர மூர்த்தி நாயனார். தெள்ளும்-தெளிவாக விளங்கும். வாசபன்னீர். பொற்சுண்ணம் முதலிய வாசனைத் திரவியங் களைத் தூவியிருக்கும்; ஒருமை பன்ம்ை மயக்கம். த்:சந்தி.