பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் sy

னுடைய மாமிசங்களும் பல வகையான கிழங்குகளை வேக வைத்த உணவும் சேர்ந்து அமையச் செய்த குன்றைப் போல உயரமாகக் குவிக்கக் கோபத்தையும் வில்லாயுதங்களையும் கொண்ட வேடர்கள் எல்லா இடங்களிலும் கலந்து கொண் டார்கள். பாடல் வருமாறு: -

ஐவன அடிசில் வெவ்வே றமைந்தன. புற்பாற் சொன்றி மொய்வரைத் தினைமென் சோறு மூங்கில்வன்

பதங்கள் மற்றும் கைவினை எயினர் ஆக்கிக் கலந்தஊன் கிழங்கு

துன்றச் செய்வரை உயர்ப்பு எங்கும் கலந்தனர் சினவில்

வேடர்.”*

ஐவன-மலை நெற்களைக் குத்திய அரிசிகளால் சமைக்கப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். அடிசில்சோற்றை. வெவ்வேறு-வேறு வேறாக. அமைந்தன அமைந்த வற்றையும். புல்-நரந்தம் புல் முதலிய நறுமணப் புற்களைச் சேர்த்துச் சமைத்த: ஒருமை பன்மை மயக்கம். பாற். சொன்றி-பாற்சோற்றையும். மொய்-அழகு மிக்க. வரைமலையில் விளைந்த த்: சந்தி, திணை-தினையரிசிகளாற். சமைத்த: ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையாகிய, சோறு-சோற்றையும். மூங்கில்-மூங்கில் நெற்களைக் குத்திய அரிசிகளால் சமைத்த ஆகுபெயர். வன்-வன்மையாகிய, பதங்கள்-சோறுகளையும். மற்றும்-வேறு வகையான உணவு களையும். கைவினை-சமைக்கும் தொழிலில் வல்லவர் களாகிய, எயினர்-வேட்டுவச் சாதிச் சமையற்காரர்கள். ஒருமை பன்மை மயக்கம். ஆக்கி-சமைத்து. க், சந்தி கலந்தஅவற்றோடு கலந்த ஊன்-மான் முதலிய விலங்குகளின் மாமிசங்களும்; ஒருமை பன்மை மயக்கம். கிழங்கு-மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கூவைக் கிழங்கு முதலிய கிழங்குகளும்; ஒருமை பன்மை மயக்கம். துன்ற-சேர்ந்து அயைய. ச்: சந்தி. செய்வரை-செய்குன்னறப் போல. செய் குன்று-கட்டுமலை. உயர்ப்படையரமாகக் குவித்து வைக்க.

7 - كبس . السCd