பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெரிய புராண விளக்கம்-4

எங்கும்.எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். சின-கோபத்தையும். வில்-வில்லாயுதங்களையும் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கலந்தனர் - கலந்து கொண்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 35-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

சிவந்த தினைகளைக் குத்திய அரிசிகளை இடித்த மாவையும் அதனோடு தேனையும் கலந்து அந்த வேடர்கள் உண்பார்கள்: தேனில் தோய்த்து நெருப்பில் வேக வைத்த மான் முதலியவற்றின் மாமிசங்களை உண்பார்கள்; தேனோடு கலந்து விளாம்பழமாகிய கவளத்தை நுகர் வார்கள்; மிகுதியாக உள்ள ஈசல்களைப் பொரித்து அந்த உணவை விருப்பித்தோடு சாப்பிடுவார்கள்; இவ்வாறு கணக்கு இல்லாத வேடர்கள் வேறு வேறாகவும், முடிவு இல்லாதவையாகவும் உள்ள உணவுகளை உண்டு தேவர் களைப் போல மகிழ்ச்சியை அடைந்தவர்கள் ஆனார்கள்." பாடல் வருமாறு:

செந்தினை இடியும் தேனும் அருந்துவார், தேனில்

தோய்த்து வெந்தஊன் அயில்வார்; வேரி விளங்கணிக் கவளம்

- கொள்வார்; நந்திய ஈயல் உண்டி கசையொடு மிசைவார்; வெவ்வே றந்தமில் உணவின் மேலோர் ஆவினர் அளவி லார்கள்."

செம்-சிவந்த தினை-தினை நெற்களைக் குத்திய அரிசி களை இடித்த ஒருமை பன்மை மயக்கம் ஆகுபெயர். இடியும்-மாவையும். தேனும்-தேனையும். அருந்துவார்கலந்து அந்த வேடர்கள் உண்பார்கள்: ஒருமை பன்மை மயக்கம். தேனில் தோய்த்து-தேனில் தோய்த்துக்கொண்டு. வெந்த-நெருப்பில் வெந்த ஊன்-மான் முதலியவற்றின் மாமிசங்களை ஒருமை பன்மை மயக்கம், அயிலவார். நுகர்லார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வேரி-தேனோடு