பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெரிய புராண விளக்கம்-4

அயல்-உடுப்பூருக்குப் பக்கத்தில் உள்ள. வரை-மலை யின் மேல் உள்ள. ப்: சந்தி. புலத்தின்-ஊர்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். வந்தார்-உடுப்பூருக்கு வந்த வேடர்களும்; ஒருமை பன்மை மயக்கம். அரும்-அருமை. யான. குடி இருப்பின்-குடியிருப்புக்களில்; ஒருமை பன்மை மயக்கம். உள்ளார்-இருந்து வாழ்கிற வேட்டுவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். இயல்-தங்களுக்கு இயல்பாக உள்ள. வகை பல வகையாகிய உணவில் - உணவுகளை உண்டமையால் ஆகுபெயர்.ஆர்ந்த-திருப்தியை அடைந்த. எயிற்றியர் - வேடர்சாதிப் பெண்கள்: ஒருமை பன்மை மயக்கம். இவர்கள் உடுப்பூரில் வாழ்கிறவர்கள். எயினர். உடுப்பூரில் வாழும் வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்.ஆகிய எல்லோரும். உயர்-உயரமான வானத்தில் உலவும். கதிர்-சூரியன். உச்சி-உச்சியை. நீங்க-அகன்று போக அந்தப் பிற்பகல் நேரத்தில் ஒழிவு-ஒழிதல் குறைதல். இல்.இல்லாத கடைக்குறை. பல்-பல வகையான, நறவுதென்னங்கள், பனங் கள், ஈச்சங் கள், அரிசியாலாகிய கள் முதலிய கள்ளுக்களை ஒருமை பன்மை மயக்கம். மாந்திகுடித்துவிட்டு. மயல்-மயக்கத்தை உறு-அடையும். களிப் பின் - கள்ளை உண்டதனால் ஏற்பட்ட அந்த மயக்கத்தில். நீடி-நெடுநேரம் இருந்து. வரி-வரிந்து செய்யப்பெற்ற. சிலை விழவு-வில் விழாவை. கொள்வார்-கொண்டாடு பவர்கள் ஆனார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'பச்சை இலைகளைக் கட்டிய தழை மாலையைத் தங்களுடைய தலைமயிரில் சுற்றிக்கொண்டு, பலவகையான மலர்களைக் கட்டிய கதம்ப மாலையைத் தங்களுடைய தலைகளில் அணிந்துகொண்டு தங்கக் காசுகளை உடைய மாலையையும் தோல்வடத்தையும் கட்டிக்கொண்டு, தங்களுடைய உடம்புகளில் சோழிகளாகிய அணிகலன்களை அந்த வேடாகளும் Φου-ιι σιι திப் பெண் பலவிகளும் அணிந்து கொண்டார்கள். குற்றம் இல்லாத சீர்த்தியைப் பெற்ற