பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 101.

வெட்சி முதலாகிய வீரத்துக்குரியவையாக வரும் துறை களுக்குரிய கண்ணிகளைத் தங்களுடைய தலைகளில் அணிந்துகொண்டு குற்றம் இல்லாத தங்கள் குலகுரு தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டிருக்கும் வலிமை யைப் பெற்ற வில்லின் பக்கத்தை அவர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். பாடல் வருமாறு: ": பாசிலைப் படலை சுற்றிப் பன்மலர்த் தொடையல் சூடிக்

காசுடை வடத்தோல் கட்டிக் கவடிமெய்க் கலன்கள்

பூண்டார்; மாசில்சீர் வெட்சிமுன்னா வருதுறைக் கண்ணி சூடி ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்." பாசிலை-பச்சை இலைகளைக் கட்டிய ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. படலை-தழை மாலையை சுற்றிதங்களுடைய தலைமயிரில் சுற்றிக்கொண்டு. ப்: சந்தி. பல்பல வகையாகிய, மலர்-மலர்களை; ஒரு ைம பன்மை மயக்கம். அவையாவன: மல்லிகைப் பூ, முல்லைப் பூ, இரு வாட்சிப் பூ, வெட்சிப் பூ வாகைப் பூ, தாழம் பூ, அல்லிப் பூ, ஆம்பற்பூ, வெண்டாமரை மலர், செந்தாரை மலர், மகிழம் பூ அரளிப் பூ, செவ்வரளிப் பூ, நந்தியாவட்டைப் பூ, பவள மல்லிகை மலர் முதலியன. த்: சந்தி. தொடையல்-தொடுத் துக் கட்டிய மாலையை. சூடி-தங்களுடைய தலைகளில் அணிந்துகொண்டு. க்: சந்தி, காசு-தங்கக் காசுகளை; 'இரத்தினங்களை' எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். உடை-பெற்ற வடத்தோல்-தோல்வடத்தை. கட்டி-இடுப் :புக்களில் கட்டிக்கொண்டு. க், சந்தி. மெய்-தங்களுடைய உடம்புகளில்; ஒருமை பன்மை மயக்கம். கவடி-சோழி களாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கலன்கள்ஆபரணங்களை. பூண்டர்ர்-அந்த வேடர்களும் வேடர் சாதிப் பெண்மணிகளும் அணிந்துகொண்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். மாசு-ஒரு குற்றமும். இல்-இல்லாத: கடைக்குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற, வெட்சி-வெட்சிப் பூ. முன்னா-முதலாகிய, வரு-வீரத்துக்கு உரியவையாக வரும்.