பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*102 - பெரிய புராண விளக்கம்-4

துறை-துறைகளுக்குரிய ஒருமை பன்மை மயக்கம். அந்தத் துறைகளாவன்: வெட்சி, கரந்தை, வஞ்சி, தும்பை, வர்கை முதலியவை. க்: சந்தி. கண்ணி-கண்ணிகளை; ஒருமை பன்மை மயக்கம். சூடி-தங்களுடைய தலைகளில் அணிந்து, கொண்டு. ஆசு-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக் குறை. ஆசிரியன்-தங்களுடைய குலகுரு. ஏந்தும்-தன் னுடைய கையில் எடுத்துக்கொள்ளும். அடல்-வலிமையைக் கொண்ட சிலை - வில்லினுடைய. மருங்கு - பக்கத்தில். சூழ்ந்தார்-அந்த வேடர்களும் வேடர்சாதிப் பெண்மணி களும் வந்து சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள்.

அடுத்து உள்ள 38-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'தொண்டகப் பறையும், முரசமும், ஊதுகொம்பும், உடுக்குக்களும், துளைகளைக் கொண்ட புல்லாங் குழலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் நிரம்பி முழங்க, அவ்வாறு எழும்பிய பெரிய சத்தத்தோடும் உறுதியான ஆற்றலைப் பெற்ற வேடர்களினுடைய ஆர வாரமும் மேலே உள்ள ஆகாயத்தை இடித்துக்கொண்டு போக, வேடர்கள் தாங்கள் கொண்டாட மேற்கொண்ட சீர்த்தியைப் பெற்ற வில்விழா பொங்கி எழும் வண்ணம் அந்தக் குறிஞ்சி நிலத்து ஊராகிய உடுப்பூரை வலமாக வந்தார்கள். பாடல் வருமாறு:

தொண்டகம் முரசும் கொம்பும் துடிகளும் துளைகொள்

வேயும் எண்டிசை நிறைந்து விம்ம எழுந்தபே ரொலியி னோடும் திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும் பிடித்துக் - - - செல்லக்,

கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலங்கொண்

டார்கள். *

தொண்டகம்-தொண்டகப் பறையும், முரசும்-முரசமும் கொம்பும் ஊதுகொம்பும். துடிகளும் - உடுக்குக்களும்.