பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Is)4 பெரிய புராண விளக்கம்-4

இந்தப் பாடல் குளகம், குன்றவர்-மலைப் பக்கத்தில் வாழும் வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். களி-இவ் வாறு ம கி ழ் ச் சி யோ டு. கொண்டாடவில்விழாவைக் கொண்டாட. க், சந்தி. கொடிச்சியர்-வேடர்சாதிப் பெண் மணிகள். துணங்கை-தங்கள் கைகளைக் கோத்துக் கொண்டு ஆடும் துணங்கைக் கூத்தை. ஆட-ஆடிக்கொண் டிருக்க, த், சந்தி. துன்றிய-சேர்ந்த, மகிழ்ச்சியோடும்ஆனந்தத்தோடும். சூர்-அச்சத்தை உ ண் டா க் கு ம். அரமகளிர்-தேவலோகத்துப் பெண்கள். ஆட-நடனம் புரிய. வென்றி-வெற்றியைத் தரும். வில்விழவினோடும்-வில்விழா வோடும். விருப்புடை-விருப்பத்தைப் பெற்ற. ஏழாம் நாளாம்-இறுதி நாளாகிய ஏழாம் நாளாகும். அன்றுஅன்றைக்கு. இரு மடங்கு-இரண்டு மடங்காக. செய்கைதங்களுடைய கொண்டாட்டமாகிய செயலை, அழகு உறஅழகு பெறுமாறு. அமைத்த-நடத்திய, பின்னர்-பிறகு.

பிறகு வரும் 40-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

' கொடுமையான கிரணங்களை வீசும் சூரியன் ஆகா யத்தின் உச்சியை அடைந்த நண்பகல் நேரத்தில் எல்லா இடங்களிலும் மங்கல வாழ்த்துக்கள் மிகுதியாக இருக்க, பக்கங்களில் பல வாத்தியங்கள் முழங்க, வேடர்கள் தங்களு டைய பழைய வழக்கத்தின்படி வில்வித்தையாகிய வேலை யில் வல்லமை பெற்றவர்களிடம் பொங்கி எழும் கரிய திரு மேனிப் பிரகாசத்தைப் பெற்ற போர் செய்யும் ஆண் சிங்கத்தைப் போன்ற திண்ணனாரை யுத்தம் புரிவதற்குரிய வில்லைப் பிடிக்குமாறு செய்தார்கள். பாடல் வருமாறு:

. வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்

மங்கல வாழ்த்து மல்க மருங்குபல் இயங்கள் ஆர்ப்பத் தங்கள்தொல் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர்

- - தம் பால் பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள்."