பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 105

வெம்-கொடுமையான கிரணங்களை வீசும். கதிர்சூரியன். விசும்பின் - ஆகாயத்தினுடைய. உச்சி-உச்சியை. மேவிய-அடைந்த பொழுதில்-நண்பகல் நேரத்தில், எங்கும்எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மங்கல வாழ்த்து-மங்கல வாழ்த்துக்கள்: ஒருமை பன்மை மயக்கம். மல்க-மிகுதியாக இருக்க. மருங்கு - பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். பல்-பல. இயங்கள் - வாத்தியங்கள். அவையாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம். சங்கநாதம், யாழ், வீணை, முகவீணை, சல்லரி, முரசு, பேரிகை, உடுக்கு முதலியவை. ஆர்ப்பமுழங்க, த்: சந்தி. தங்கள்-வேடர்கள் தங்களுடைய தொல்-பழைய. மரபின்-வழக்கத்தின்படி. விஞ்சைத்தனு - வில்வித்தையாகிய த்: சந்தி. தொழில்கலையில். வலவர்தம்பால்-வல்லமை பெற்றவர்களிடம்; ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. பொங்குபொங்கி எழும். ஒளிக்கரும்-கரிய திருமேனிப் பிரகாசத்தைப் பெற்ற போர்-போர் செய்யும். ஏற்றை-ஆண்சிங்கத்தைப் போன்ற திண்ணனாரை; உவம ஆகுபெயர். ப்: சந்தி. பொரு-போர் புரிவதற்குரிய. சிலை-வில்லை. பிடிப்பித் தார்கள். பிடிக்குமாறு செய்தார்கள். -

பிறகு உள்ள 41-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தங்கம் உண்டாகும் விசாலமான அந்த மலையின் பக்கத்தில் செய்ய வேண்டிய தங்கள் குலதெய்வத்தை வழி படும் கடமையை முன்பு புரிந்து நிறைவேற்றிய வில்லாயுதத் தைப் பயன்படுத்தும் வேலையைப் புரியும் போர்க்களத்தை அடைந்து விதித்த முறைப்படி அந்தத் தெய்வத்தைப் :ணிந்து இருக்கும் அன்றைத் தினத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் வலிமையைப் பெற்ற வில்லை ஆளும் திறமை முழுவதையும் அடியேனை ஆளாகக்கொள்ளும் வேடர்களுக்குள் அருமையாக விளங்கிய ஆண்சிங்கத்தைப் போன்ற திண்ணனார் கற்றுக்கொண்டார். பாடல்

வருமாறு: