பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரிய புராண விளக்கம்-A,

பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன்டின் செய்த விற்றொழிற் களத்தில் கண்ணி விதிமுறை வணங்கி

மேவும்: அற்றைகாள் தொடங்கி நாளும் அடற்சிலை ஆண்மை

முற்றக் கற்றனர் என்னை ஆளும் கானவர்க் கரிய சிங்கம்."

பொன்-தங்கம் உண்டாகும். தட-விசாலமான வரை யின்-அந்த மலையினுடைய. பாங்கர்-பக்கத்தில். ப்: சந்தி. புரிவுறு-தாங்கள் செய்ய வேண்டிய கடன்-தங்களுடைய குலதெய்வத்தை வழிபடும் கடமையை பராய்க்கடனை முன்-முன்பு, செய்த-புரிந்து நிறைவேற்றிய. வில்-வில்லா யுதத்தைப் பயன்படுத்தும். தொழில்-வேலையைப் புரியும். களத்தில்-போர்க்களத்தை உருபு மயக்கம். நண்ணிஅடைந்து விதிமுறை-விதித்த முறைப்படி, வணங்கி அந்தக் குலதெய்வத்தைப் பணிந்து. மேவும்-இருக்கும். அற்றை. நாள்-அன்றைத் தினத்தில். தொடங்கி-ஆரம்பித்து. நாளும்ஒவ்வொரு நாளும். அடல்-வலிமையைப் பெற்ற சிலைவில்லை. ஆண்மை-ஆளும் திறமை. முற்ற-முழுவதையும் . க்: சந்தி. என்னை-அடியேனை; இது சேக்கிழார் தம்மைக் கூறிக்கொண்டது. ஆளும்-ஆளாகக கொள்ளும். கான வர்க்கு-வேடர்களுக்குள்; ஒருமை பன்மை மயக்கம். அரியஅருமையாக விளங்கிய, சிங்கம்-ஆண்சிங்கத்தைப் போன்ற வராகிய திண்ணனார்; உவம ஆகுபெயர். கற்றனர்-கற்றுக் கொண்டார். -

அடுத்து வரும் 42-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அழகிய நிறத்தைப் பெற்ற கொடிய வில்வித்தையையும, வேறு ஆயுதங்களைப் பிரயோகம் செய்யும் வித்தையையும் மலர்ச்சி பெறும் வண்ணம் கற்றுக்கொண்டு கண்களுக்கு அகலமாகத் தோன்றும் சாயல் பொங்கி எழ, கலைகள் வளரும் சந்திரனைப் போலப் பதினாறு பிராயமாகிய பருவத்தை வரம்பு இல்லாத முன்பிறவியில் செய்த புண்ணி