பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 107"

யம் தோற்றத்தை அளித்து மேலும் மேலும் வளர்ந்து வருவதனுடைய விளக்கத்தைப் போலத் திகழ்பவராகிய திண்ணனார் அடைந்தார். பாடல் வருமாறு:

வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுக் கண்ணகல் சாயல் பொங்கக் கலைவளர் திங்க ளேபோல் எண்ணிரண் டாண்டின் செவ்வி எய்தினார் எல்லை

- இல்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு

போல்வார்.'

வண்ண-அழகிய நிறத்தைக் கொண்ட வெம்-கொடிய. சிலையும்-வில்வித்தையையும்; ஆகுபெயர். மற்ற வேறாக உள்ள. ப்: சந்தி. படைகளும்-ஆயுதங்களைப் பிரயோகம் செய்யும் வித்தைகளையும்; ஆகுபெயர். மலர-மலர்ச்சியைப் பெறும் வண்ணம். க்: சந்தி, கற்று-திண்ணனார் கற்றுக் கொண்டு. க், சந்தி. கண்-கண்கள்: ஒருமை பன்மை மயக்கம். அகல்-அகலமாகத் திறந்து பார்க்குமாறு உள்ள சாயல்-தம் முடைய திருமேனிச் சாயல். பொங்க-பொங்கி எழ. க், சந்தி. கலை-கலைகள்; ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளரும். திங்கள்-சந்திரனை. ஏ. அசைநிலை. போல்-போல. எண் இரண்டு-பதினாறு. ஆண்டின்-பிராயமாகிய, செவ்விபருவத்தை, எல்லை-வரம்பு. இல்லா-இல்லாத, ப், சந்தி. புண்ணியம்-முன்பிறவியிற் செய்த புண்ணியச் செயல்கள்; ஒருமை பன்மை மயக்கம், தோன்றி.பயனை அளிக்கத் தோற்றத்தைக் காட்டி. மேன்மேல்-மேலும் மேலும், வளர் வதன்-வளர்ச்சி அடைவதனுடைய. பொலிவு-விளக்கத்தை. போல்வார்-போல் விளங்குபவராகிய அந்தத் திண்ணனார். எய்தினார்-அடைந்தார்.

பின்பு உள்ள 43-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இவ்வாறு அந்தத் திண்ணனார் வளர்ச்சியை அடைந்து' நிரம்பி வந்த காலத்தில் கரிய நிறத்தைப் பெற்ற குறவர்கள் வாழும் பெரிய குறிஞ்சி நிலத்தில் உள்ள ஊராகிய உடுப்