பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் j Il.

பிறகு வரும் 45-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு அந்த வேடர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நாகனும் மேவி வருகின்ற தன்னுடைய முது மைப் பருவத்தின் சார்பைப் பார்த்து முன்னால் நின்று கொண்டிருந்த அந்த வேடர்களுக்குக் கூறுவானாகி, 'முதுமைப் பிராயத்தினால் யான் முன்பு செய்ததைப் போல விலங்குகளை வேட்டையர்டுவதில் முயற்சியைச் செய்ய வில்லை; என்னுடைய புதல்வனாகிய திண்ணனை உங்களுக் குத் தலைவனாக நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறிய சமயத்தில், அந்த வேடர்களும் முதலில் நாகன் வேட்டையாட முடியாமல் இருப்பதற்கு வருத்தத்தை அடைந்து, பிறகு திண்னன் தலைவனாக வருவதை எண்ணி மகிழ்ச்சியை அடைந்து தங்களுடைய அரசனாகிய அந்த நாகனுடைய திருவடிகளைப் பணிந்து பின்வரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு:

சொன்னஉரை கேட்டலுமே நாகன் தானும்

சூழ்ந்துவரும் தன்மூப்பின் தொடர்வு நோக்கி முன்னவர்கட் குரைசெய்வான், மூப்பினாலே

முன்புபோல் வேட்டையினில் முயல் கில்லேன்; என்மகனை உங்களுக்கு காத னாக

எல்லீரும் கைக்கொண்மின் என்ற போதின் அன்னவரும் இரங்கிப்பின் மகிழ்ந்து தம்கோன்

அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்."

சொன்ன-அவ்வாறு அந்த வேடர்கள் கூறிய. உரைவார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்டலும். கேட்டவுடன். ஏ. அசைநிலை. நாகன்தானும-நாகனும். தான்: அசைநிலை. சூழ்ந்து-தன்னை மேவி. வரும்-வரு கின்ற, மூப்பின்-முதுமைப் பருவத்தினுடைய. தொடர்வுசார்பை. நோக்கி-பார்த்து. முன்-தன் முன்னால் நின்று கொண்டிருந்த அவர்கட்கு-அந்த வேடர்களுக்கு. உரை