பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 12 பெரிய புராண விளக்கம்-4

செய்வான்-கூறுபவனாகி; முற்றிெ. க்சம். மூப்பினால்- எனக்கு, உண்டான முதுமைப் பிராயத்தினால், ஏ: அசைநிலை. முன்பு போல்-முன்பு செய்ததைப் போல. வேட்டையினில். விலங்குகளை வேட்டையாடுவதில். முயல்கில்லேன்-முயலும் ஆற்றலை யான் பெறவில்லை. என்- என்னுடைய மகனைபுதல்வனாகிய திண்ணனை. உங்களுக்கு நாதனாகஉங்களுக்குத் தலைவனாக. எல்லீரும்-நீங்கள் எல்லோரும். கைக்கொண்மின்-ஏற்றுக்கொள்ளுங்கள். என்ற - என்று கூறிய. போதின்-சமயத்தில். அன்னவரும்-அந்த வேடர் களும்; ஒருமை பன்மை மயக்கம், இரங்கி-நாகன் தங்களுக் குத் தலைவனாக இராமல் டோவதக்காக வருத்தத்தை அடைந்து. ப்: சந்தி. பின்-பிறகு, மகிழ்ந்து-திண்ணன் தங்களுக்குத் தலைவனாக வருவதை எண்ணி மகிழ்ச்சியை அடைந்து. தசரதன் த வ ம் புரிய எண்ணியதையும், இராமனை அரசனாகச் செய்வதையும் எண்ணி மந்திரிகள வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்' என்று வரும் இராமாயண வரலாறு இங்கே நினைப்பதற்குரியது. திரண்ட தோளினன் இப்படிச் செப்டலும் சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே வெருண்டு மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால் இரண்டு கன்றினுக் கிரங்குமோ ராவென இருந்தார்.” ' அன்ன ராயினும் அரசனுக் கதுவல துறுதி

பின்னர் இல்லெனக் கருதியும் பெருநில வரைப்பில் மன்னும் மன்னுயிர்க் கிராமனின் மன்னவர் இல்லை என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார்.'

(மந்திரப் படலம், 32-3.) என்று கம்ப ராமாயணத்தில் வருவதைக் காண்க.

தம்-தங்களுடைய. கோன்-அரசனாகிய நாகனுடைய. அடி-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். வணங்கிபணிந்து. இம்மாற்றம்-பின்வரும் ஆந்தி வார்த்தைகளை; ஒருமை பண்பை மயக்கம். அறைகறைார்கள் - கூறுகிற வர்கள் ஆனார்கள்.