பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 113

அடுத்து உள்ள 46-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

இவ்வளவு காலமும் உன்னுடைய வில்லின் கீழே தங்கி யிருந்து இனிமையாக உணவை உண்டு ஒரு துன்பமும் இல்லாமல் நாங்கள் வாழ்ந்திருந்தோம்; இனிமேலும், தலை வனே, உன்னுடைய திருவருள் வழியில் நின்று வாழ்வதை அல்லாமல் அடுத்திருக்கும் வழி வேறு இருக்கிறதோ? அது அல்லாமல் உண்மையான வீரத்தைப் பெற்ற திண்ணனை உன்னுடைய பரம்பரையில் மிகவும் மேம்பாட்டை அடையும் வண்ணமே பெற்றெடுத்து அடியேங்களுக்கு வழங்கினாய்; விளங்குகின்ற மேம்பாட்டைக் கொண்டு வில்லை ஏந்திய புதல்வனாகிய திண்ணனை இங்கே அழைத்துக்கொண்டு வந்து உங்களுடைய மலையை ஆளுகின்ற அரசாட்சியை அவனுக்கு வழங்கி அருள்வாயாக’ என்று மகிழ்ச்சியை அடைந்து அந்த வேடர்கள் கூறினார்கள். பாடல் வருமாறு:

இத்தனைகா லமும்கினது சிலைக்கீழ்த் தங்கி

இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் : இன்னும்

அத்த, கின தருள்வழியே கிற்ப தல்லால்

அடுத்த நெறி வேறுளதோ ? அதுவே அன்றி

மெய்த்தவிறல் திண்ணனை உன் மரபில் சால

மேம்படவே பெற்ற எளித்தாய் , விளங்கு மேன்மை

வைத்தசிலை மைந்தனை ஈண்டழைத்து நுங்கள்

வரையாட்சி அருள். என்றார் மகிழ்ந்து வேடர்.'

இத்தனை காலமும்-இவ்வளவு காலமும். நினதுஉன்னுடைய சிலைக்கீழ்-வில்லின் கீழே. த்: சந்தி. தங்கி. தங்கிக்கொண்டிருந்து. இனிது - இனிமையாக. உண்டுஉணவை உண்டு. தீங்கு-ஒரு துன்பமும். இன்றி-இல்லாமல். இருந்தோம்-நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். இன் னும்-இனிமேலும். அத்த-அடியேங்களுடைய தலைவனாகிய நாகனே. நினது-உன்னுடைய. அருள்-திருவருள். வழி-வழி யில். ஏ. அசைநிலை. நிற்பது-நின்று வாழ்வதை. அல்லால்அல்லாமல். அடுத்த - அடுத்தபடி இருக்கும். நெறி-வழி.

பே.-4-8 - -