பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம் - 7.

பெற்றிமையான்-பான்மையால்; பான்மையைப் பெற் றவன்' எனலும் ஆம். மாநிலத்து-இந்தச் செந்தமிழ் மாநிலத்தில். மிக்க-மிகுதியாக, பெருமிதம்-கர்வம், வந்து உற்று-வந்து சேர்ந்து. உலகில்-இந்தப் பூமண்ட்ல்த்தில். தன்னையே சால-தன்னையே மிகவும். மதித்துள்ளான்மதித்துக் கொண்டிருப்பவன். அதிசூரன் மதித்துக் கொண் டிருப்பவன்' என்று கூட்டுக.

அடுத்து வரும் 7-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : 'தான் அனுபவிக்கும் ஜீவனோபாயம் கெட்டுப் போக, தங்களுடைய சாதியில் உள்ள உரிமையாகிய குறையாததும் தான் புரிவதும் ஆகிய தொழிலாகும் ஆசிரியனாக உள்ள இயல்பில் கிடைக்கும் செல்வம் ஒவ்வொரு நாளும் குறைந்து அந்த ஏனாதி நாத நாயனாருக்கே மேம்பட்டு இருப்பதால் அந்த நாயனாரிடத்தில் தகாத பகைமையை மேற் கொண் டான். பர்டல் வருமாறு : . - " தான் ஆள் விருத்திகெடத் தங்கள் குலத் தாயத்தின்

ஆண்ாத செய்த்ொழிலாம் ஆசிரியத் தன்மைவளம் மேனாளும் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத் தேலா இகல்புரிந்தான்.' தான் ஆள்-தான் அனுபவித்து வரும். விருத்தி-ஜீவனோ பாயம். கெட-கெட்டுப் போக. த் : சந்தி. தங்கள்-தங்களு டைய. குல-சாதியில் உள்ள. த் : சந்தி. தாயத்தின்-உரிமை யாகிய, ஆனாத-குறையாததும்; வினையாலணையும் பெயர். செய்-தான் புரிவதும் ஆகிய வினையாலணையும் பெயர். தொழிலாம்-வேலையாகும். ஆசிரியத் தன்மைவாளாயுதத்தைப் பிரயோகம் செய்யும் முறையைக் கற்பிக் கும் தொழிலைப் பெற்ற ஆசிரியனாக உள்ள இயல்பினால். வளம்-கிடைக்கும் செல்வம். மேல் நாளும் - அப்பால் ஒவ்வொரு நாளும். தான் : அசைநிலை. குறைந்து குறைவை அடைந்து. மற்று: அசை நிலை. அவர்க்கே-அந்த ஏனாதி நாயனாருக்கே. மேம்படலால்-மேலாக உண்டாவதால்,