பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பெரிய புராண விளக்கம்-4

வாளைப் பிரயோகம் செய்யும் முறையைக் கற்பிக்கும் துறை யில். எள்ளாத-பிறர் இகழாத செய்கை-செயலின். இயல் பின் தன்மையோடு. ஒழுகு-ஏன்ாதி நாயனார் நடந்து வரும். நாள்-காலத்தில். தள்ளாத ஒதுக்கித் தள்ள முடியாத. தொழில்-தொழிலில். உரிமை-உரிமையைப் பெற்ற தாயத் தின்-தாயாதிகளில் ஒருவனாக, திணை மயக்கம். உள்ளான்இருப்பவன். அதிசூரன் என்பான்-அதிசூரன் என்று சொல் லப்படும் பெயரைப் பெற்ற ஒருவன். உளன்-இருப்பவன். ஆனான்-ஆயினான். - - -

பிறகு வரும் 6-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'அந்த அதிசூரன் என்பவனும் வெற்றியைத் தருவதும் வடிக்கப் பெற்றதும் ஆகிய வாளாயுதத்தைப் பிரயோகம் செய்யும் வேலைகளைக் கற்றுத் தெரிந்து கொண்டவர் களுக்குள் தன்னை வென்றவர்கள் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பான்மையால் இந்தச் செந்தமிழ் மாநிலத்தில் மிகுதியாகக் கர்வம் வந்து சேர்ந்து இந்தப் பூமண்டலத்தில் தன்னையே மிகவும் மதித்துக் கொண்டிருப் பவன், பாடல் வருமாறு :

மற்றவனும் கொற்ற வடிவாட் படைத்தொழில்கள் கற்றவர்கள் தன்னிற் கடந்துள்ளார் இல்லையெனும் பெற்றிமையான் மாநிலத்து மிக்க பெருமிதம்வங் துற்றுலகில் தன்னையே சால மதித்துள்ளான்.'

மற்று : அசை நிலை. அவனும்-அந்த அதிசூரன் என்ப வனும். கொற்ற-வெற்றியைத் தருவதும்; வினையாலணை யும் பெயர். வடிவடிக்கப் பெற்றதும்; வினையாலனையும் பெயர். வாட்படை-ஆகிய வாளாயுதத்தைப் பிரயோகம் செய்யும். த் : சந்தி. தொழில்கள்-வேலைகளை, கற்றவர் கள்-கற்றுத் தெரிந்து கொண்டவர்களுக்குள். தன்னில்தன்னை; உருபு மயக்கம். கடந்துள்ளார்-வென்றிருப்பவர் கள்: ஒருமை பன்மை மயக்கம். இல்லை-யாரும் இல்லை. எனும்-என்று எண்ணிக் கொண்டிருக்கும்; இடைக்குறை.