பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனர்தி நாயனார் புராணம் 5

அரசிளங்குமரர்களுக்குக் கற்பித்து வந்த-அதனால் தமக் குக் கிடைத்த, வளம்-செல்வம். எல்லாம்-எல்லாவற்றை யும். நாளும்-ஒவ்வொரு நாளும். பெரு-பெரிய விருப்பால்" விருப்பத்தோடு உருபு மயக்கம். நண்ணும்-தமக்கு அமை யும். கடப்பாட்டில் - கடமையில். தாளும் தம்முடைய திருவடிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். தடவிசால மான. முடியும்-திருமுடியையும். காணாதார் தம்மையும்பன்றியின் உருவத்தை எடுத்தும் அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்தும் தேடிக் காணாதவர்களாகிய திரு மாலையும் பிரமதேவனையும். காணாதார்: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. தொண்டு-தொண்டர் களாக திணை மயக்கம். ஆளும்-ஆட்கொள்ளும். பெரு மான்-சிவபெருமானார்; ஒருமை பன்மை மயக்கம். அடி தம்முடைய திருவடிகளின்; 'ஒருமை பன்மை மயக்கம். த் சந்தி. தொண்டர்க்கு-திருத்தொண்டராகிய ஏன்ாதி நாயனாருக்கு. ஆக்குவார்- உண்டாகச் செய்தருளுவார். 'கடப்பாட்டில் ஆக்குவார்’ எனக் கூட்டுக. . . . . .

பிறகு வரும் 5-ஆம் பாடலின் கருத்து வருமாறு : பகைவர்களும் வாழ்த்தும் நன்மையைப் பெற்ற வாட்படையைக் கற்பிக்கும் துறையில் இகழாத செயலின் தன்மையோடு ஏனாதி நாயனார் நடந்து வரும் காலத்தில், ஒதுக்கித்தள்ள் முடியாத தங்களுட்ைய படைப் பயிற்சியைக் கற்பிக்கும் தொழிலில் உரிமையைப் பெற்ற தாயாதிகளில் ஒருவனாக அதிசூரன் என்னும் பெயரை உடையவன் இருப்பவன் ஆனான். பாடல் வருமாறு : -

1. கள்ளார் களும்போற்றும் நன்மைத் துறையின்கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள் - தள்ளாத தங்கள் தொழிலுரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளனானான்.

நள்ளார்களும்-பகைவர்களும். போற்றும்-வாழ்த்தும். நன்மை-நன்மையைப் பெற்ற த்: சந்தி. துறையின்கண்.