பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெரிய புராண விளக்கம்.:

தொன்மை-பழமையான. த் : சந்தி. திருநீற்று-விபூதி யைப் பரப்பும். த் : சந்தி. தொண்டின்-திருத்தொண்டிலும். வழிபாட்டின்-சிவபெருமானை வழிபடுவதிலும். நன்மைக் கண்-ஆகிய நல்ல் செயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். நின்ற-நிலை பெற்று நின்ற, நலம்-நல்ல பண்பு. என்றும்எந்தக் காலத்திலும். குன்றாதார்-குறையாமல் இருப்பவர். மன்னர்க்கு - அரசிளங்குமரர்களுக்கு; ஒருமை ப ன் ைம மயக்கம். வென்றி-வெற்றியைத் தரும், வடி-வடித்த. வாட்படை - வாளாயுதத்தைப் பிரயோகம் .ெ ச ய் யு ம் முறையை: ஆகுபெயர். பயிற்றும்-கற்பிக்கும். தன்மைஇயல்பை உடைய. த் சந்தி. தொழில்-வேலையாகிய. விஞ்சையில் - வித்தையில். தலைமை - தலைமையான நிலையை. சார்ந்துள்ளார்-அடைந்திருப்பவர் ஏனாதி நாய னார்; தோன்றா எழுவாய், v.

அடுத்து வரும் 4-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : வாள் என்னும் ஆயுதத்தைப் பிரயோகம் செய்யும் يم. முறையைக் கற்பித்து, அதனால் தமக்குக் கிடைத்த செல்வம் எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் பெரிய விருப்பத்தோடு அமையும் கடமையில் தன்னுடைய திருவடி களையும் விசாலமான திருமுடியையும் பன்றி உருவெடுத் தும் அன்னப் பறவை வடிவத்தை எடுத்தும் தேடிக் காணாதவர்களாகிய திருமாலையும் பிரம தேவனையும் தொண்டர்களாக ஆட்கொள்ளும் சிவபெருமான் தன்னு டைய திருவடிகளின் திருத்தொண்டராகிய ஏனாதி நாயனா ருக்கு உண்டாகச் செய்தருளுவார். பாடல் வருமாறு :

வாளின் படைபயிற்றி வந்த வள மெல்லாம் நாளும் பெருவிருப்பால் கண்ணும் கடப்பாட்டில் தாளும் தடமுடியும் காணாதார் தம்மையும் தொண் டாளும் பெருமான் அடித்தொண்டர்க் காக்குவார்." வாளின்-வாள் எ ன் னு ம். ப ை- ஆயுதத்தைப் பிரயோகம் செய்யும் முறையை ஆகுபெயர். பயிற்றி