பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் ឃ្លា &

வாழக் குடிதழைத்து மன்னியஅப் பொற்பதியில் ஈழக் குலச்சான்றோர் ஏனாதி நாதனார்.: - வேழக் கரும்பினொடு - நாணற்கரும்புச் செடிகளோடு: ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான. கரும்புகரும்புச் செடிகள்: ஒருமை பன்மை மயக்கம். தண்-குளிர்ச்சி யைப் பெற்ற. வயலில்-வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். தாழ-தாழ்ந்து நிற்க, வளைந்து நிற்க, க்சந்தி. கதிர்-கதிர்களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். ச் : சந்தி. சாலி-சாலி என்னும் உயர்ந்த வகை நெற்பயிர் கள்; ஒருமை பன்மை மயக்கம். தான்: அசை நிலை. ஓங்கும்-ஒங்கி வளரும். தன்மையதாய் - இயல்பை உடைய தாகி இருக்க, வாழ்-அந்த ஊரில் வாழும். அக்குடி-அந்தக் குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். தழைத்து-தழைப் பை அடைந்து மன்னிய-நிலை பெற்று வாழ்ந்த, அப்பொற் பதியில்-அந்தத் தோற்றப் பொலிவைக் கொண்ட ஊரில். ஈழக்குல - கள் இறக்குவோர் சாதியில் திரு அவதாரம் செய்த ச் சந்தி. சான்றோர்-சான்றாண்மையைப் பெற். றவர். ஏன்ாதி நாயனார்-ஏனாதி நாத நாயனார்.

பிறகு உள்ள 3-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பழமையாகிய விபூதியைப் பரப்பும் தொண்டிலும் சிவபெருமானை வழிபடுவதாகிய நல்ல செயலிலும் நிலை பெற்று நின்ற நல்ல பண்பு எந்தக் காலத்திலும் குறை யாமல் இருப்பவர், அரசர்களுக்கு வெற்றியைத் தரும் வடித்த வாளாயுதத்தைப் பிரயோகம் செய்யும் வித்தை யைக் கற்பிக்கும் இயல்பாகிய வேலையிலும், அந்த வித்தை யிலும் தலைமையான நிலையை அடைந்திருக்கிறவா ஏனாதி தாயனார். பாடல் வருமாறு : -

தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் கின்ற கலம் என்றும் குன்றாதார், மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத்தொழில் விஞ்சையில் தலைமை 喹 சார்ந்துள்ளார்.'