பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பெரிய புராண விளக்கம்-4

குளிர்ச்சியைப் பெற்ற தரள-முத்து மாலைகளைத் தொங்க. விட்டிருக்கும்; ஆகுபெயர். வெண்-வெள்ளை நிறத்தைக் கொண்ட கவிகை-சந்திர வட்டக்குடையையும். த், சந்தி. தார்-ஆத்தி மாலையையும் பெற்ற. வளவர்-சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த ஒருமை பன்மை மயக்கம். சோ னாட்டில்-சோழவள நாட்டில், வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். அறை-முரலும். பூம்-மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: வேங்கை மரம், வாகை மரம், கடம்ப மரம், வாத நாராயண மரம், புளிய மரம், வில்வ மரம், விளா மரம், வேப்ப மரம், மருத மரம் முதலியவை. சோலைபொழிலையும். வயல்-வயல்களையும் கொண்ட ஒருமை பன்மை மயக்கம், மருதத்-மருத நிலமாகிய, தண்-குளிர்ச்சி யைப் பெற்ற, பணை-வேறு வகையான வயல்கள்: ஒருமை. பன்மை மயக்கம். சூழ்ந்து-சுற்றியிருந்து. எண்திசையும்கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள ஊர்களில் ஆகுபெயர். திசை: ஒருமை பன்மை மயக்கம். ஏறிய-பரவிய. சீர்-சீர்த்தியையும். எயில்-திரு மதிலையும் பெற்ற மூதூர்-பழைய சிலத்தலம். எயினனுர்எயினனூர் ஆகும். • ,

அடுத்து வரும் 2-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: "நாணற் கருப்பஞ் செடிகளோடு மென்மையான கருப் பஞ்செடிகளும் குளிர்ச்சியைக் கொண்ட வயல்களில் தாழ்ந்து நிற்கக் கதிர்களை உடைய சாலி என்னும் உயர்ந்த வகையாகிய நெற்பயிர்கள் ஓங்கி வளரும் இயல்பை உடையதாகி இருக்க, வாழும் அந்தக் குடும்பங்கள் தழைத்து ஓங்கி நிலை பெற்று வாழ்வதும் ஆகிய அந்தத் தோற்றப் பொலிவை உடைய எயினனுார் என்னும் ஊரில் வாழும் ஈழக்குலத்தில் திருவவதாரம் செய்தருளிய சான்றோர் "ஏனாதி நாத நாயனார். பாடல் வருமாறு :

வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தானோங்கும் தன்மையதாய்