பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் மூன்றாவதாக உள்ள இலை மலிந்த சருக்கத்தில் இரண்டாவதாக விளங்குவது ஏனாதி நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு:

"தங்களுடைய அடையாளப் பொறியாகிய புலியைத் தங்கம் உண்டாகும் இமய மலையின்மேல் பொறித்து இந்தப் பூமண்டலத்தைப் பாதுகாக்கும், குளிர்ச்சியைப் பெற்ற முத்து மாலைகளைத் தொங்க விட்டிருக்கும் வெண் கொற்றக் குடையையும் ஆத்தி மாலையையும் பெற்ற சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த சோழவள நாட்டில் வண்டு கள் ரீங்காரம் செய்யும் மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் பொழிலையும், வயல்களையும் பெற்ற மருத நிலத்தில் குளிர்ச்சியை உடைய வயல்கள் சுற்றி யிருந்து, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழங்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திக்குக்களிலும் உள்ள ஊர்களில் பரவியிருக்கும் சீர்த்தியை யும் திருமதிலையும் பெற்ற பழைய சிவத்தலம் எயினனுார் என்பதாகும். பாடல் வருமாறு : -

புண்டரிகம் பொன்வரைமேல் ஏற்றிப் புவிஅளிக்கும் தண்டரள வெண் கவிகைத் தார்வளவர் சோணாட்டில் வண்டறைபூஞ் சோலைவயல் மருதத்தண் பணைசூழ்ந் தெண்டிசையும் ஏறியசீர் எயில்முதுரர் எயினனுர்.' புண்டரிகம்-தங்களுடைய அடையாள இலச்சினை யாகிய புலியை. பொன்- தங்கம் உண்டாகும். வரைமேல்இமய மலையின்மேல். ஏற்றி-பொறித்து. ப்: சந்தி, புவிஇந்தப் பூ மண்டலத்தை அளிக்கும்-பாதுகாக்கும். தண்