பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 115

. சிலைமறவர் உரைசெய்ய நாகன் தானும்

திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு, மலைமருவு நெடுங்கானில் கன்னி வேட்டை

மகன்போகக் காடுபவி மகிழ ஊட்டத் தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி

தனை அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று கிலைமை அவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி

நெடிதுவந்து விருப்பினொடும் கடிது வந்தாள்.' சிலை-விற்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். மறவர்-வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். உரைசெய்யஅவ்வாறு கூற நாகன் தானும்-நாகனும். தான்: அசைநிலை. திண்ணனை-தன்னுடைய புதல்வனாகிய திண்ணனை. முன்தனககு முன்னால், கொண்டு-அழைத்துக்கொண்டு. வர - வருமாறு. ச் சந்தி. செப்பி-கூறி. விட்டு-ஒர் ஆளை அனுப்பி விட்டு. மலை-மலைப் பக்கத்தில், மருவு-பொருந்தியுள்ள நெடும்-நீளமாக இருக்கும். கானில்-காட்டில். கன்னி வேட்டை-முதல் முறையாகச் செய்யும் கன்னி வேட்டைக்கு. இராமபிரான் முதல் முதலாகத் தாடகையைப் போரில் வதம் செய்ததை, கன்னிப் போர்’ என்று கம்பர் பாடுகிறார்.

" வாசநாண் மலரோன் அன்ன மாமுனி பணிம றாத

காகலாம் கனகப் பைம்பூட் காகுத்தன் கன்னிப் போரில் கூசுவாள் அரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க அஞ்சி ஆசயால் உழலும் கூற்றும் இவைசிறி தணிந்த தன்றே.'

(தாடகை வதைப் படலம், 77) என வருவதைக் காண்க.

மகன்-தன்னுடைய புதல்வனாகிய அந்தத் திண்ணன், போக-செல்லும் பொருட்டு. க், சந்தி. காடு-காட்டில் உள்ள தெய்வங்கள்: ஆகுபெயர். மகிழ-மகிழ்ச்சியை அடையும் இன்னம், பலி-பூசைசெய்து நிவேதனங்களை ஒருமை பன்மை மயக்கம். ஊட்ட படைப்பதற்காக. த் சந்தி. தலை - தலைமையான. மாபின்வழி - பரம்பரையின் வழி இல், வந்த பிறந்த தேவராட்டிதனை பூசாரிச்சியாகிய