பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரிய புராண விளக்கம்-4

தேவராட்டியை, தன் அசை நிலை. அழைமின்-அழைத்துக் கொண்டு வாருங்கள். என-என்று கூற; இடைக்குறை. அங்கு-அந்த இடத்தில். ச்: சந்தி. சார்ந்தோர்-இருந்தவர் களாகிய வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். சென்றுபோய். நிலைமை-உள்ள நிலையை. அவள் தனக்கு-அந்தத் தேவராட்டிக்கு. தன்: அசைநிலை. உரைப்ப-கூற, நரைநரைத்த மயிர்களைத் தலையில் பெற்ற, மூதாட்டி-அந்த முதிய கிழவி. நெடிது-மிகவும். உவந்து-மகிழ்ச்சியை' அடைந்து. விருப்பினொடும் - விருப்பத்தோடும். கடிது - வேகமாக. வந்தாள்-வந்து சேர்ந்தாள். -

பிறகு உள்ள 48-ஆம் பாடலின் கருத்து வருமாறு : 'அவ்வாறு வந்த தேவராட்டி காட்டில் வளர்ந்து நிற்கும் மரத்தில் தோன்றிய கோடுகளை உடைய தளிர் களோடு சேர்ந்த கண்ணியைத் தன்னுடைய தலையில் அணிந்துகொண்டு, கலைமானினுடைய கொம்பை அறுத்துச் செய்த குழைகளைத் தன்னுடைய காதுகளில் பூட்டிக்கொண்டு, மானினுடைய வயிற்றில் தோன்றிய அரிதாரத்தினால் தன்னுடைய நெற்றியில் திலகத்தை வைத் துக்கொண்டு, மயிலினுடைய கழுத்தில் உள்ள நீலமான பீலியையும் சங்குமணிகளையும் கோத்து அமைத்த வடத் தையும் அணிந்துகொண்டு, மார்பிலிருந்து இறங்கிச் சுருங்கிக் கொங்கைகள் சரிவை அடைந்து தாழ்ந்து தொங்க, தழைத்த பீலியைத் தன்னுடைய இடுப்பில் கட்டியிருக்கும் மரவுரியின் மேல் அமைந்து விளங்க, அங்கே வந்து சேர்ந்து மலர்களோடு நெருங்கிய மலை நெல்லைக் குத்திய அரிசியாகிய பிரசா தத்தை வழங்கிப் போர் புரியும் வேடர்களினுடைய தலை வனாகிய நாகனை வாழ்த்திவிட்டு நின்றுகொண்டிருந் தாள். பாடல் வருமாறு: -

கானில்வரித் தளிர்துதைந்த கண்ணிசூடிக்

கலைமருப்பின் அரிந்தகுழை காதிற் பெய்து மானின்வயிற் றரிதாரத் திலகம் இட்டு

மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு