பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & பெரிய புராண விளக்கம்-4

அரிசியாகிய அட்சதையை. நல்கி-வழங்கி. ப் சந்தி. போர்யுத்தம் புரியும். வேடர் - வேடர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். கோமானை-அரசனாகிய நாகனை. ப்: சந்தி. போற்றி-வாழ்த்திவிட்டு. நின்றாள்-நின்று கொண் டிருந்தாள்.

அடுத்து உள்ள 49-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு நின்றுகொண்டிருந்த முதிய குறத்தியி னுடைய வடிவத்தைக் கொண்ட பூசாரிச்சியாகிய தேவ ராட்டியை நேரில் பார்த்து, 'தாயே, நீ வறுமை அகன்று நன்றாகவும் இனிமையாகவும் வாழ்ந்திருந்தாயோ?” என்று கேட்கும் நாகனுக்கு எதிரில் அவனை நன்மைகள் பெருமாறு: வாழ்த்துக்களைக் கூறிவிட்டு, 'நல்லவையும் மென்மையாக உள்ளவையும் ஆகிய மாமிசங்களையும், ஈசல்களோடு கள்ளையும், மலையில் விளைகின்ற தினை முதலிய தானி யங்களையும், வேறு வகைகளையும், யான் விரும்பியவை யாவும் அன்றைக்கு நீ வழங்கியபடியினால் பெற்றுக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை நடத்துகிறவள் ஆனேன்; என்னை அழைத்துக்கொண்டு வந்த காரியம் என்ன?’ என்று தெய்வ ஆவேசத்தை அடையும் அந்தத் தேவராட்டி கேட்டாள். பாடல் வருமாறு:

கின்றமுது குறக்கோலப் படிமத் தாளை

நேர்நோக்கி, அன்னை, நீ கிரப்பு நீங்கி நன்றினிதின் இருந்தனையோ?" என்று கூறும் நாகன் எதிர் நலம்பெருக வாழ்த்தி, நல்ல மென்தசையும் ஈயலொடு கறவும் வெற்பில்

விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம் அன்றுரீ வைத்தபடி பெற்று வாழ்வேன்;

அழைத்தபணி என்?" என்றாள் அணங்கு சார்ந்தாள்.'" நின்ற-அவ்வாறு தன்முன்னால் நின்றுகொண்டிருந்த, முது-முதிய. குற-குறமகளினுடைய. க்: சந்தி. . கோல-வடி வத்தைப் பெற்ற, ப்: சந்தி. படிமத் தாளை-முருகனுடைய விக்கிரகத்தை வைத்திருக்கும் தேவராட்டியை. படிமம்