பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 119

விக்கிரகம். நேர்-நேராக. நோக்கி-பார்த்து. அன்னைதாயே விளி. நீ நிரப்பு-நீ வறுமை. நீங்கி-அகன்று. நன்றுநன்றாகவும். இனிதின்-இனிமையாகவும். இருந்தனையோவாழ்ந்திருந்தாயோ, என்று-என கூறும்-கேட்கும். நாகன்நாகனுக்கு, எதிர்-எதிரில். நலம்-நன்மைகள்; ஒருமை பன்மை மயக்கம். பெருக - பெருகி உண்டாகுமாறு. வாழ்த்திவாழ்த்துக்களைக் கூறிவிட்டு. நல்ல. நல்லவையும். மென்மென்மையாக உள்ளவையும். தசையும் - ஆகிய மாமிசங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். ஈயலொடு - ஈசல் களோடு; ஒருமை பன்மை மயக்கம். நறவும் - கள்ளையும். வெற்பில் - மலையில். விளை-விளையும். வளனும்-தினை, மலைநெல், சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு முதலிய தானியங்களையும் ; ஒருமை பன்மை மயக்கம். பிற-வேறு. வளனும்-வளங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அவை யாவன செல்வம், அரிசி, நெல், புடைவை முதலியவை. வேண்டிற்று-யான் விரும்பியவை ஆகிய; ஒருமை பன்மை பயக்கம், எல்லாம் - எல்லாவற்றையும். அன்று - அன்றைக்கு. நீ வைத்தபடி-நீ வழங்கியபடியினால். பெற்றுபெற்றுக்கொண்டு. வாழ்வேன்-என்னுடைய வாழ்க்கையை நடத்துபவள் ஆனேன். அழைத்த-என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்த, பணி-காரியம். என்-என்ன. அணங்கு- தெய்வ ஆவேசத்தை சார்ந்தாள்-அடைந்த வளாகிய அந்தத் தேவராட்டி. என்றாள்-என்று கேட்டாள். பின்பு உள்ள 50-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

ஒரு குற்றமும் இல்லாத என்னுடைய குடும்பத்தில் பிறந்த வலிமையையுடைய புதல்வனாகிய திண்ணன் எங் களுடைய சாதியினுடைய தலைமைப் பதவியை நான் வழங்க ஏற்றுக்கொண்டு அதனை மேற்கொண்டு பூட்டு தலைப் பெற்ற கொடிய விற்களை ஏந்தும் வேடர்களைப் பாதுகாக்கும் மலையின் உரிமையைப் பெற்றுக் கொண்டு முதல் முதலாக அதைச் செய்கிறான்; அவனுக்கு என்றைக்கும் வேட்டையாடுதலாகிய தொழில் எனக்கும்