பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 பெரிய புராண விளக்கம்-4

மற்று - அசைநிலை. அவன்றன்-அந்த நாகனுடைய. தன் : அசைநிலை. மொழி-வார்த்தைகளை ; ஒருமை பன்மை மயக்கம். கேட்ட வரை-கேட்ட மலையில் வாழும். ச்: சந்தி. சூராட்டி-தெய்வ ஆவேசம் வந்து ஆடும் தேவராட்டி. மனம்-என்னுடைய உள்ளம். மகிழ்ந்துமகிழ்ச்சியை அடைந்து. இங்கு-இந்த இடத்திற்க. அன்போடு-அன்புடன். வருகின்றேனுக்கு-வருகின்ற எனக்கு. எற்றையினும்-எந்த நா ைள க் காட் டி லு ம். குறிகள் சகுனங்கள். மிக-மிகவும். நல்ல-நல்லவையாக. ஆனஆயின.இதனால்-இவ்வாறு நான் நல்ல சகுனங்களைக் கண்ட தனால்.ஏ:அசை நிலை.உன்-உன்னுடைய. மைந்தன்-வலிமை யைப்பெற்ற புதல்வனாகிய, திண்ணன் ஆன - திண்ணன் ஆகிய வெற்றி-வெற்றியைத் தரும். வரி-வரிந்து கட்டப் பெற்ற, ச் சந்தி. சிலையோன்-வில்லை ஏந்திய அவன். நின்உனனுடைய. அளவில் அன்றி - அளவில் அல்லாமல். மேம் படுகின்றான் மேம்பாட்டை அடைந்திருக்கிறான். என்றுஎனக் கூறி. விரும்பி-விருப்பத்தை அடைந்து. வாழ்த்தி - அவனுக்கு வாழ்த்துக்களைக் கூறி. க், சந்தி. கொற்றவெற்றியை வழங்கும். வன தெய்வங்கள் - காட்டில் வாழும் கடவுளர்கள். மகிழ-மகிழுமாறு. ஊட்ட-நிவேதனம் செய்' வதற்கு. வேண்டுவன வேண்டிய பிரப்பரிசி, இரத்தம் கலந்த சோறு, வெல்லம் முதலிய பண்டங்களை. குறைவுஒரு குறைவும். இன்றி - இல்லாமல். க்: சந்தி. கொண்டுவாங்கிக்கொண்டு. போனாள் - அந்தத் தேவராட்டி. சென்றாள்.

அடுத்து உள்ள 52-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தெய்வ ஆவேசம் வந்து ஆடும் குறத்தியாகிய முதிய கிழவி போன பிறகு திண்ணனார் வில்லை ஏந்திய தம்முடைய தந்தையாகிய நாகன் தம்மை அழைத்து வரச்செய்ய சீர்த்தியைக் கொண்ட மையைப் போலக் கரிய நிறம் பொருந்திய நறுமணம் வீசும் தலைமயிரில் நல்ல மணம கமழும் கண்ணியை நீலமணியைப் போன்ற ஒரு மலை.