பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் . 123.

வந்தது என்று கூறும்வண்ணம் தங்களுடைய கைகளில் அமைந்த விற்களை ஏந்திய வேடர்கள் தம்மை வாழ்த்த எழுந்தருளி வாத்சல்யத்தைச் செய்யும் தம்முடைய தந்தையாகிய அந்த நாகனுடைய வெற்றிக் கழலைப் பூண்டிருக்கும் திருவடிகளைப் பணியும் சமயத்தில் செய் குன்றுகளைப் போல விளங்கும் தம்முடைய தோள்கள் இரண்டையும் இறுகத் தழுவிக்கொண்டு செழிப்பாக, இருக்கும் புலித்தோலாகிய ஆசனத்தில் தன்னுடைய முன்னால் இருக்குமாறு அமர வைத்தான். பாடல் வருமாறு'

தெய்வம் நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு

திண்ணனார் சிலைத்தாதை அழைப்புச் சீர்கொள் மைவிரவு கறும்.குஞ்சி வாசக் கண்ணி

மணிலே மலைஒன்று வந்த தென்னக் கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து

காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில் செய்வரைபோற் புயம் இரண்டும் செறியப் புல்லிச்

செழும்புலித்தோல் இருக்கையில்முன்

- சேர வைத்தான் .' தெய்வம்-தெய்வ ஆவேசம். நிகழ்-வத்து ஆடும். குறகுறத்தியாகிய, முதியாள்-முதிய கிழவியாகிய தேவராட்டி. சென்ற-அவ்வாறு போன. பின்பு-பிறகு, திண்ணனார். சிலை-திண்ணனார் வில்லை ஏந்திய த் சந்தி. தாதைதம்முடைய தந்தையாகிய நாகன். அழைப்ப-தம்மை அழைத்துக்கொண்டு வரச் செய்ய. ச் சந்தி. சீர்-சீர்த்தியை. கொள்-கொண்ட மை-மையைப் போல. விரவு-கரியநிறம் அமைந்த நறும்-நறுமணம் கமழும். குஞ்சி-தம்முடைய தலைமயிரில். வாச-நல்ல வாசனை வீசும். க், சந்தி. கண்ணிகண்ணிலய அணிந்த, மணிநீல - நீலமணியைப் போன்ற.. மலை ஒன்று-ஒரு மலை. வந்தது என்ன - வந்தது' என்று கூறும் வண்ணம். க்: சந்தி. கை-தங்களுடைய கை களில்; ஒருமை பன்மை மயக்கம். விரவு-பிடித்து அமைந்த. சிலை-விற்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். வேடர்