பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I?4 பெரிய புராண விளக்கம்-4

வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். போற்ற-வாழ்த்த. வந்து-எழுந்தருளி. காதல்-வாத்சல்யத்தை. புரி-செய்யும். தாதை-தம்முடைய தந்தையாகிய நாகனுடைய கழல்வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். வணங்கும்-பணியும். போதில்-சமயத்தில். செய்வரை போல்செய்குன்றுகளைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். புயம்-தோள்கள்; ஒருமை பன்மை மயக்கம். இரண்டும்இரண்டையும். செறிய-இறுக. ப்: சந்தி. புல்லி-தழுவிக் கொண்டு. ச் சந்தி. செழும் - செழுமையாகிய, புலித்தோல்புலித்தோலாகிய இருக்கையில்-ஆசனத்தில். முன்-தனக்கு முன்னால். சேர - இருக்குமாறு. வைத்தான் - அமர வைத்தான்.

அடுத்து உள்ள 53-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு தனக்கு முன்னால் அமர்ந்திருந்த தன்னுடைய வலிமையைப் பெற்ற புதல்வனாகிய திண்ணனுடைய முகத்தைப் பார்த்த நாகன், முதுமைப் பிராயம் என்னை வந்து சேர்தலினால் முன்பு செய்ததைப்போல என்னுடைய சொந்த முயற்சியினால் விலங்குகளை வேட்டையாடுவதற்கு இனிமேல் எனக்கு எண்ணம் இல்லை; எனக்கு மேலாக நிலை பெற்று விளங்கும் விற்களை ஏந்திய மலைவாணர்களாகிய வேடர்களினுடைய சாதியைப் பாது காக்கும் செயலை நீ மேற்கொண்டு பகைவர்களை ஆயுதங் களால் வெட்டி வீழ்த்தி, விலங்குகளை வேட்டையாடி என்றைக்கும் நின்னுடைய பரம்பரையினுடைய உரிமை யைச் சுமப்பாயாக’ என்று கூறிவிட்டுத் தோலுடையையும் உடைவாளையும் அந்தத் திண்ணனுடைய கைகளில் அளித் தான். பாடல் வருமாறு: -

முன் இருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்

மூப்பெனைவுங் தடைதலினால் முன்பு போல என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட

இனி.எனக்குக் கருத்தில்லை ; எனக்கு மேலாய்