பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார். புராணம் 125.

மன்னுசிலை மலையர்குலம் காவல் பூண்டு மாறெதிர்ந்து மாவேட்டை ஆடி என்றும் உன்னுடைய மரபுரிமை தாங்கு வாய்.” என்

றுடைதோலும் சுரிகையும்கைக் கொடுத்தான்

அன்றே .'

முன்-தனக்கு முன்னால் அவ்வாறு. இருந்த-அமர்ந் திருந்த மைந்தன்-தன்னுடைய வலிமையைப் பெற்ற புதல்வனாகிய திண்ணனுடைய. முகம்-முகத்தை. நோக்கிபார்த்து. நாகன்-திண்ணனுடைய தந்தையாகிய நாகன். மூப்பு-முதுமைப் பருவம். எனை-என்னை: இடைக்குறை, வந்து அடைதலினால்-வந்து சேர்தலினால், முன்பு-முன்நாட் களில், போல-செய்ததைப் போல. என்னுடைய முயற்சி யினால்-என்னுடைய சொந்த முயற்சியால். வேட்டை ஆடவிலங்குகளை வேட்டையாடும் தொழிலைப் புரிவதற்கு,இனி. இனிமேல். எனக்குக் கருத்து இல்லை- எனக்கு எண்ன்னம் இல்லை. எனக்கு மேலாய்-என்னைவிட மேலாக. எனக்கு: உருபு மயக்கம். மன்னு-நிலைபெற்று விளங்கும். இலை. விற்களை ஏந்தும் ஒருமை பன்மை மயக்கம். மலையர். மலைவாணர்களாகிய வே ட ர் க ளி னு ைட ப; ஒருமை பன்மை மயக்கம். குலம்-சாதியை. காவல்-பாதுகாக்கும் செயலை. பூண்டு-நீ மேற்கொண்டு. மாறு-பகைவர்களை ; திணை மயக்கம். எதிர்ந்து எதிர்த்து ஆயுதங்களால் அவர்களை வெட்டி வீழ்த்தி. மா-காட்டில் வாழும் சிங்கம், புலி, மான், வரையாடு, புலி, வேங்கை, ஒநாய், கரடி முதலிய விலங்குகளை ஒருமை பன்மை மயக்கம். வேட்டை ஆடி-வேட்டையைச் செய்து. என்றும் - என்றைக்கும். உன்னுடைய-நின்னுடைய மரபு-பரம்பரை பரம்பரையாக வந்த உரிமை-உரிமையை. தாங்குவாய்-பொறுப்பாயாக. என்று-என நாகன் கூறிவிட்டு. உடைதோலும்-தோலாடை யையும். சுரிகையும்-உடைவாளையும். கை-திண்ணனுடைய கைகளில்; ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கொடுத்தான். அளித்தான். அன்று, ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.