பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 - பெரிய புராண விளக்கம்-A,

நறுமணத்தை. கொண்ட - பெற்ற, முல்லை - முல்லை மலர்களை ஒருமை பன்மை மயக்கம். பினை-கட்டிய மாலையின். மீது-மேல். குறிஞ்சி-குறிஞ்சி மலரும். வெட்சிவெட்சி மலரும். செறி-நெருங்குதலை; முதல் நிலைத் தொழிற்பெயர். கொண்ட-பெற்ற வண்டின் - வண்டு களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குலம்-கூட்டம். சீர்-சீர்த்தியை. கொள-பெற்று மொய்க்கும் வண்ணம்; இடைக்குறை. ப் சந்தி. பின்பு - முதுகுப்புறத்தில், செய்துஅமைத்து,

பின்பு உள்ள 58-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

நெற்றியின் முன்பக்கத்தின் மேல் மயிலிறகின் அடிக் குருத்துகளுக்கு நடுவில் அமைத்த குன்றி மணியில் புரிகளைப் பெற்ற மயிராலாகிய கயிற்றைப் பொருந்தும்படி அணிந்து மின்னலைப் போல விளங்கும் சங்கு மணிகளையும், தி கழும். வெண்மையான தோடுகளையும் திண்ணனாருடைய காது களில் தங்கிப் பக்கத்தில் இருந்த அவை பெருமையைப் பெற்ற சந்திரர்களைப் போலத் தங்கியிருக்க . பாடல் வருமாறு -

முன்நெற்றியின் மீது முருக்திடை வைத்த குன்றி தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி மின்னில் திகழ் சங்கு விளங்குவெண் தோடு காதின் மன்னிப்புடை கின்றன. மாமதி போல வைக .'

இந்தப் பாடலும் குளகம். முன்நெற்றியின்-நெற்றியின் முன்பக்கத்தின். மீது-மேல். முருந்து-மயிலிறகின் அடிக் குருத்துகளுக்கு ஒருமை பன்மை மயக்கம். இடை-நடுவில். வைத்த-அமைத்த. குன்றிதன்னில்-குன்றிமணியில், தன்: அசைநிலை. புரி-புரிகளை ஒருமை பன்மை மயக்கம். கோண்ட-பெற்ற மயிர்க்கயிறு-மயிரால் ஆகிய கயிற்றை. ஆர-பொருந்தும்படி. ச் சந்தி. சாத்தி-அணிந்து. மின்னில்பின்னலைப் போல. திகழ்-விளங்கும். சங்கு - சங்கு: மணி களையும் ; ஒருமை பன்மை மயக்கம். விளங்கு-திகழும்.