பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 133

வெண்-வெண்மையான. தோடு-தோடுகளையும் ; ஒருமை பன்மை மயக்கம். காதின்-திண்ணனாருடைய செவிகளில் : ஒருமை பன்மை மயக்கம். மன்னி-தங்கி, ப்: சந்தி. புடைபக்கத்தில். நின்றன-இருந்த அவை. மா - பெருமையைப் பெற்ற, மதிபோல-சந்திரர்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். வைக-தங்கியிருக்க.

அடுத்து உள்ள 59-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'திண்ணனாருடைய கழுத்தில் வெண்மை நிறத்தைப் பெற்ற சோழிகளைச் சேர்த்து அமைத்த ஒளி வீசும் மாலை யைச் சேரும்படி வைத்துக்கொண்டு சங்கு மணிகளோடு வேறு பல மணிகளைக் கோவையாகக் கோத்து அந்தக் கோவையின் நடுவில் காட்டுப் பன்றியினுடைய தந்தங்கள் துண்டுகளாகிய சந்திரர்களைப் போல விளங்குபவை தொங்க வேங்கைப்புலியினுடைய வன்மையான தோல் இடுப்பிலும்,கால்களில் தண்டைகளைப் பூண்டு, பூத்தொழில் அழகு பொங்க அமைந்த சன்னவீரம் என்னும் அணிகலன் விளங்க . பாடல் வருமாறு :

கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்

கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக்கோடு துண்டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை - வன்றோல்

தண்டைச்செயல் பொங்கிய சன்னவீரம் தயங்க . .

o

இந்தப் பாடலும் குளகம். கண்டத்திடைதிண்ணனா ருடைய கழுத்தில். வெண்-வெள்ளை நிறத்தைப் பெற்ற, கவடி-சோழிகளை ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. கதிர்-ஒளியை வீசும். மாலை சேர-கட்டிய மாலையைச் சேரும்படி. க் சந்தி. கொண்டு- வைத்துக் கொண்டு. அக்கொடு-சங்கு மணிகளோடு : ஒருமை பன்மை மயக்கம். பல்-பல. மணி - மணிகளை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன பாசி மணி, படிக மணி, நீல மணி, சிவப்பு மணி, மஞ்சள் மணி முதலியவை. கோத்து-கோவையாகக்